பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் பார்த்துக் கொள்வது ஒருவகை. அவ்வகையில் அனைவரும் செம்மை நலம் சான்றவர்களாயின், நம்மை முதுமையும் பற்றது. என்றும் இளையர்' என்னுமாறு வாழலாம். வீடும் நாடும் செம்மை நெறியில் திகழின் தனிமனிதனும் சமு. தாயமும் என்றென்றும் முதுமை அடையாது, இளமை, கொழிக்கும் எழிலார் வாழ்வில் திளைக்கும் என்பது உறுதி. இந்த உண்மையினையே பிசிராந்தையார் என்னும் புலவர் தம் மேல் சாற்றிக் கூறுகின்ருர். - யாண்டுபல வாக கரையில வாகுதல் யாங்கா கியர் என வினவுதி ராயின் மாண்டஎன் மனைவியொடு மக்களும் கிரம்பினர் யான்கண் டனையர் என் இளையரும், வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும், அதன்றலை ஆன்றவிங் தடங்கிய கொள்கைச் சான்ருேர் பலர்யான் வாழும் ஊரே (புறம். 191 என்று அவர் கூறும் போது அந்த ஊரையும் நாளையும் எண்ணி' எண்ணி ஏங்க வேண்டியுள்ளதல்லவா? இதில் புலவர் நல்ல மனைவிமக்களையும் பணியாளரையும், அல்லது செய்யா வேந் தனையும், சான்ருண்மை மிக்க தக்காரையும் பெற்றமையே தம் இளமைக்குக் காரணம் என்பதைக் காட்டி, எந்த நாட்டில் இவர்கள் இணைந்து அறத்தாறு வாழ்கின்ருர்களோ அவர்கள்வழி அந்த நாடும் பிற இயற்கைகளும் என்றும் வற்ருவளம் வாழும் எனக் குறிக்கின்ருர். மற்ருெருபுலவர் அச் சான்ருண்மை பெறத்தக்கவழி அனைவரையும் ஒத்து உற்ற வராகவே நோக்குதலும் வியத்தலும் இகழ்தலும் இல்லாச் செம்மை நெறியும், இனியதையும் இன்னுததையும் வேறு படுத்தாது எதிலும் இனிமை காணும் இயல்பும் என்பதை. நன்குகாட்டியுள்ளார். அப்புலவர் அனைவருக்கும் அறிமுகமான கணியன் பூங்குன்றனரே ஆவர். ஆம்! உலகைப்பற்றி யும் மக்கள் செம்மை வாழ்வினைப் பற்றியும் அது சிறக்கும் நெறி பற்றியும் நன்கு கணித்துள்ள அவர் தாம் பெற்ற: