பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறம் காட்டும் அறம் 67 இன்பம் வையகம் பெறுக’ எனப் பாட்டாக நமக்கு வடித்துத். தந்துள்ளார். இதோ அவர் வாக்கு: யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்ருே ரன்ன சாதலும் புதுவதன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று மிலமே, முனிவின் இன்ன தென்றலு மிலமே, மின்னெடு வானங் தண்துளி தலைஇ ஆனது கல்பொரு திரங்கும் மல்லற் பேரியாற்று நீர்வழிப் படுஉம் புணே போல் ஆருயிர் முறைவழிப் படுஉம் என்பதைத் திறவோர் காட்சியில் தெளிந்தன மாதலின் மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே (புற. 192) இதில் திறவோர் காட்சியில் தெளித்த கணிப்பை நன்கு விளக்கிக் கணியன்’ ஆகிச் சிறப்புப் பெற்ருரல்லரோ வினை பற்றி வரும் என்பதை ஆவூர் மூலங்கிழார் என்ற புலவரும் காட்டி மறுமைக்கு இம்மை வழிகாட்டியாவதை விளக்கு. கிருர். இந்நிலை, பொலம் பூங்காவின் கன்னட் டோரும் செய்வினை மருங்கின் எய்த வல்லதை உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும் கடவதன் மையின் கையற வுடைத்து (புறம். 38): எனக்காட்டி இதன்வழி உலகநிலையையும் ஒருவாறு தெளியக் காட்டியுள்ளார். இந்த உண்மையை ஒளவையார் ஒருவன் செய்த நல் வினையே அவனுடன் வரும் என்று ஆருயிர் முறை வழிப்படுஉம் தன்மை வகையால் விளக்குகிரு.ர்.