பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை வங்கத் தமிழ் மக்கள் உள்ளத்தால் தமிழ் வளர்ப்பவர்கள். தமிழெனின் தளராக உழைப்ப வர்கள் செல்வத்தை அள்ளி வழங்குபவர்கள். அவர்கள் இன்றைக்கு இருபத்தைந்து ஆண்டு களுக்குமுன் தோற்றுவித்த சங்கமும் 'பாரதி தமிழ்சி சங்க”மாகும். பாரதி தமிழ்ச் சங்கம் வங்கத் தலைநகராம் கல்கத்தாவில் தோன்றிய நாள்தொட்டுத் தமிழ் வளர ஒல்லும் வகையிலெல்லாம் பாடுபடுகிறது; எளிய பாமர மக்கள் முதல் கல்லூரி மாணவர் வரை தமிழைக் கற்க வழிகளே வகுக்கின்றது. தமிழ் நாட்டு அறிஞர்களே வருக என ஏற்று அந்நாட்டு மக்களுக்குத் தமிழார்வம் பெருகச் செய்கிறது. பாரதி தமிழ்ச் சங்கத்தார் வெள்ளிவிழாவிற்கு வருகவென அழைத்தார்கள். வான்வழிச் சென்று விழாவிற் கலந்து திரும்பினேன். விழா நாட்களில் அவர்தம் 'தமிழ்க் காதல்’ நன்கு புலயிைற்று. அவ்விழாவில் நான் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்த நூல். தொல்காப்பியர் காலங் தொடங்கி இன்று வரை வாழ்ந்த புலவர் பலரை எனக்குத் துணையாக