பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறம் காட்டும் அறம் 77. எனப் பாராட்டுகின்ருர். நடுக்கற்ற நிலைக்கு உவமையாக அவர் பொற்கோட்டு இமயத்தையும் பொதியத்தையும்’ காட்டுவர். ஆம். மலே குலைந்தாலும் மனம் குலையாத உள உரம் மக்களுக்கு அறமாற்றுவதில் தேவையன் ருே! இதே கருத்தைச் சொல் தவரு வாய்மையின் அடிப்படையில் புல வர் இரும்பிடர்த் தலையார், கிலம்பெயரினும் நின்சொல் பெயரல் (புறம். )ே என வற்புறுத்துகிருர், அரசியல், அறத்தின் அடிப்படையாக அமைய வேண்டு வது அரசியல் வேறு அறம் வேறு என வாதிப்பவரும் உண்டு. அதற்குச் சான்ருகக் கண்ணன் கீதையினைக் காட்டு வாரும் உண்டு. அரசன் அறத்தைக் கொள்வனுயின் நாட்டு மக்களை எப்படி 'அறம் காத்து மறம் தடிந்து ஒம்ப முடியும் என்பர். அதனலேயே வள்ளுவர் அரசியலை அறத்துப் பாலில் வைக்கவில்லை எனவும் கூறுவர். ஆராய்ந்து பார்ப் பின் அவர்தம் கூற்றுக்கள் அனைத்தும் தவறெனக் காட்ட முடியும். வையத்து வாழ்வாங்கு வாழ்தல் அறநெறி. அரசன் களை கட்டு நற்பயிர் ஒம்பும் உழவனுக இருத்தல் அறம். அதுவும் பெரும்பாலும் பொருள் பற்றிய இடர்ப் பாட்டிலே அவன் செயல் மிகுதி. அதுவும் அறம் பற்றியே எழும் என்பதையே இன்று முதலில் கண்டோம். எனவே அரசனும் அவனுக்குரிய அறநெறி பிறழாது வாழக் கடமைப் பட்டவனேயாவன். இதையேதான் மதுரை மருதன் இள நாகனர், நான்குடன் மாண்ட தாயினும், மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம் அதல்ை, நமரெனக் கோல்கோ டாது பிறர் எனக் குணங்கொல்லாது ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்