பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் திங்க என்ன தண்பெருஞ் சாயலும் வானத் தன்ன வண்மையும் மூன்றும் உடையை யாகி இல்லோர் கையற நீcடு வாழிய! (புறம். 55) என இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனே வாழ்த்து கின்ருர். இதில் அறநெறி என்று முதலில் சுட்டிக் காட்டிய தையே பின்னல் பெரிதும் விளங்க வைக்கின்ருர். இவர் வாய் மொழியை நன்கு உற்று அறியின் மேலே காட்டியோர் கூற் றுக்கள் அனைத்தும் பயனற்றுப் போம். இந்த அறநெறி அரசர் வாழ்கின்ற காலத்தில் மட்டுமன்றி வீழ்கின்ற காலத் தும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்பதை ஒளவை யார் அதிகமானப் பாடுங்கால் விளக்குகிருர். மன்னர் போர்க் களத்தே புறமுதுகிடாது போரிட்டு மடிந்து வீர மரணம் எய்துதலே அறத்தாறு. அவ்வாறு அன்றி, நோய்வழி மடி வார்களாயின் அவர்களை என் செய்வது? அவர்களே அறநெறி பிறழா வகையில் வீரமரணம் எய்தியவராகவே அடக்கம் செய்யப் பெறுதல் வேண்டும். அதற்கென அவர் காட்டிய வழி எண்ணற்பாலது. புல் பரப்பி, அதில் உடலைக் கிடத்தி 'வீரர் செல்வழிச் செல்கென வாளால் வெட்டி அடக்கம் செய்யும் மரபினை அவர் அறநெறியாகக் காட்டி, அரசர் மறைந்தும் அறம் மறையா வகையினை விளக்குகின்ருர். நோய்ப்பால் விளிந்த யாக்கை தழிஇக் காதல் மறந்து அவர் தீதுமருங்கு அறுமார் அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி ‘மறங்கங் தாக நல்லமர் வீழ்ந்த நீள்கழல் மறவர் செல்வழிச் செல்'கென வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ (புறம். 93) எனச் செம்மை நலம் காண ஒளவையார் காட்டியுள்ளார்.