பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.80 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப் பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல (புறம். 55) என்பதும் புறநானூற்று அடிகள். இப்படியே இப்புறத்தில் வடநாட்டுப் பெருங் காவியங்களாகிய இராமாயணமும் பாரதமும் நன்கு எடுத்தாளப் பெறுகின்றன. அவை ஈண்டுத் தேவை இல்லையாதலின் விட்டு மேலே செல்கின்றேன். இனி, இத்தகைய மன்னர்தம் செங்கோல் எப்படி அறத். தாறு அமைய வேண்டும் என்பது பற்றிய புறத்தின் விளக் கத்தையும் காணல் நலம் பயப்பதாகுமல்லவா? கம்பர் 'வறியவன் ஒம்பும் செய்யென ஒம்ப வேண்டுமென்கின்ருர், நாம் முன்னமே, தான் உயிர் என உணர்ந்து அரசன் உலகை ஒம்பவேண்டிய நெறியைக் குறித்தோம். ஈண்டுப் புலவர் காட்டும் வேளூேர் உவமையை எண்ணிப் பார்த்தல் நல்லது. பெற்ற தாயரை நினைக்கின்றனர் புலவர். அம்மகளிர் தம் குழவியை எப்படி எப்படிக் கண்ணும் கருத்துமாக - கண் ணுள் மணிபோலக் காத்தோம்புவார்கள் என்ற எண்ணம் புறம் பாடிய புலவர்கள் உள்ளத்தே அரும்புகின்றது. மாற். ருர் நாடு அழிய-அது காப்பார் இன்மையின்-தாயில் தூவாக் குழவிபோல அந்த நாடுகள் கெடுகின்றன என்கின் ருர் புலவர். மற்ருெரு புலவர் தாம் பாடிய அரசனே முன் னிறுத்திக் 'குழவி கொள்பவரின் ஒம்புமதி' என அறமுரைக் கின்ருர். குழவிக்கு நோய்வரின் தான் மருந்துண்டு வாழ வைப்பதுபோல, நாட்டுக்கு நலிவு வந்தால் தான் வாடி அந்: நாட்டின் அவத்தைப் போக்க வேண்டுவதே அரசர் தொழில் என்பதை அவர்கள் விளக்கிக் காட்டுகின்றனர். நாடு எக் கேடு கெடினும் கவலை இல்லை எனவும் தம் தனிவாழ்வு சிறக்கப் பாடுபடுவதே தம் கவலை எனவும் இன்று நாடாளும் பலரை எண்ணின் இவ்வறம் எத்துணைத் தேவைப்படுவது என்பது நன்கு தெளிவுறும். மாற்ருர் நாடு காப்பார் இன் மையின் கெடுவதைப் பெரும் புலவர் பரணர்,