பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறம் காட்டும் அறம் 81". தாயில் தூவாக் குழவி போல ஒவாது கூஉம்கின் உடற்றியோர் நாடே (புறம். 4): என்கின்ருர். நரிவெரூஉத் தலையார் பொருள்மொழிக் காஞ்சி யாக, குழவி கொள்பவரின் ஓம்புமதி அரிதோ தானே அது பெறலருங் குரைத்தே (புறம் 5): எனக் காட்டி, அருமந்த அரசாட்சி அரிதோ மற்றெளிதோ என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திச் சென்றுள்ளார். இத்தகைய நாடு காக்கும் நல்ல வீர மன்னர் இரண்டின் இடைப்பட்டு அலமரும் நிலையைப் பரணர் நன்கு காட்டுவர். ஒருபுறம் உரிமை மகளிரைத் தழுவும்நிலை , மற்ருெரு புறம் குழவி கொள்பவரின் நாடுகாத்து - தேவையாயின் போர் காத்துப் பொன்றும் நிலை. இந்த அடிப்படையில் போர்க்களம் புகும் உறுதியுடைய மன்னர் மாற்ருர் நாட்டை அழித்து வெற்றி பெற்றே மீளுவர் என்ற உண்மையினையும். பரணர் காட்டத் தவறவில்லை. இதோ அவர் வாக்கு: விளங்கிழை பொலிந்த வேளா மெல்லியல் சுணங்கணி வனமுலை அவளொடு நாளை மணம்புகு வைகல் ஆகுதல் ஒன்ருே ஆரமர் உழக்கிய மறங்கிளர் முன்பின் நீளிலே எஃகம் மறுத்த உடம்பொடு வாரா உலகம் புகுதல் ஒன்றெனப் படைதொட் டனனே குரிசில், ஆயிடைக் களிறுபொரக் கலக்கிய தண்கயம் போலப் பெருங்கவின் இழப்பது கொல்லோ! மென் புனல் வைப்பின்இத் தண்பணை யூரே (புறம். 341). இவ்வாறு வீரம் விளைக்கும் ஆற்றல் வாய்ந்த வேந்தர் தம் நாட்டு மக்களைக் குழவி கொள்பவரின் ஒம்பும் நிலையை