பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:82 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் வேறு சில புலவர்கள் அழகுபடக் காட்டுகின்றனர். நல்ல அரசர் வாழும் நாட்டில் தீயுண்டாம்-ஆல்ை அது சோறு அடும் தீயேயாம்; அன்றிச் சூரியன் சூடாம். அந்நாட்டில் வில் உண்டாம்-ஆனல் அது திருவில்லாம். அந்நாட்டில் படை உண்டாம்-ஆல்ை அது கலப்பையில் உள்ள படையாம். இவற்றைக் குறுங்கோழியூர்கிழார் அழகாகப் பாடுகிரு.ர். சோறுபடுக்கும் தீயோடு செஞ்ஞாயிற்றுத் தெறல்அல்லது பிறிதுதெறல் அறியார்கின் னிழல்வாழ் வோரே! திருவில் அல்லது கொலைவில் அறியார் காஞ்சில் அல்லது படையும் அறியார் அறந்துஞ்சும் செங்கோலேயே (புறம். 20) இவ்வடிகள் எண்ணத்தக்கன அல்லவோ? இதே கருத்தைக் கோவூர்கிழார் கிள்ளிவளவனைப் பாடும்போது. அடுதீ யல்லது சுடுதீ யறியா இருமருந்து விளைக்கும் கன்னுட்டுப் பொருநன் (புறம். 70) எனப் பாராட்டுவர். எனவே அரசர் அறவாழ்வு இவற்ருல் -ஏற்றமுறுகின்றதன்ருே? வெள்ளைக் குடி நாகனர் என்றபுலவர் குளமுற்றத்துத் துஞ் சிய கிள்ளிவளவனைப் பாடிய பாடலும் ஈண்டு எண்ணத்தக் கதே. அவன்கீழ் உள்ள சிறுபணியாளரால் நிலவரிக்காக அவர் நிலம் எடுத்துக் கொள்ளப் பெற்ற நிலையில், அவர் அரசனை நேரில் கண்டு குறை இரந்து முறை காட்டித் தம் நிலத்தை விடுவித்துக் கொண்டதோடு, என்றென்றும் அரசருக்கு இருக்க வேண்டிய அறவாழ்வையும் வற்புறுத்திச் சென்றுள் வளார். அரசன் 'பெய்யெனப் பெய்யும் மழை போன்றிருக்க வேண்டும்’ என்கிருர். அவன் குடை மக்கள் குறையாகிய வெயிலை மறைக்கப் பயன்பட வேண்டும் என்கின்ருர் .