பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறம் காட்டும் அறம் 83 உழவர் வளமே நாட்டுவளம் என்கின்ருர். இன்றைய அர சாங்கம் இந்த உண்மையை இன்னும் உணரவில்லை. அதன லேயே பல உணவுப்பஞ்சங்கள் உண்டாகின்றன. இவ்வாண்டு தமிழ்நாட்டில் பொங்கல் விழாவின ஏர்முனை விழாவாகக் கொண்டாடவிழைந்தார் உழவராகிய முதலமைச்சர். ஆனல் இருந்தநிலை வேறு. நாட்டு வெற்றி உழவர் வெற்றியில்தான் அடங்கியுள்ளது என்ற உண்மையை வெள்ளைக்குடி நாகனர், வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப் பொருபட்ை தருஉம் கொற்றமும் உழுபடை ஊன்று.சால் மருங்கின் ஈன்றதன் பயனே (புறம். 35) என்கின்ருர். அதுமட்டுமன்று. நாட்டில் மழை இன்றி வளம் குன்றின் அதற்கும் ஆளுபவரே காரணர் என்கின்ருர். மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் இயற்கை யல்லன செயற்கையிற் ருேன்றினும் காவலர் பழிக்கும்.இக் கண்ணகன் ஞாலம் (புறம். 35) என்பன அவரடிகள். இவை மட்டுமன்றி அரசர் உழவரை எவ்வாறு காக்கக் கடமைப்பட்டவர் என்ற உண்மையினை -யும் அப்பொழுது நாடு வெற்றி பெறும் என்ற சிறப்பையும் காட்டுகிருர். அதற்கு இடையாக நிற்கும் பலரும் அவர்முன் தோற்றமளிக்கின்றனர். அனைத்தையும் பிணைத்து, நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது பகடுபுறங் தருகர் பார மோம்பிக் குடிபுறங் தருகுவை யாயின்கின் அடிபுறங் தருகுவர் அடங்கா தோரே (புறம். 35) எண்முடிக்கின் ருர். இந்த உண்மையை என்று உணர்கின்றதோ அன்று நாடு நாடாகும். அன்றேல்..........? தாமப்பல் கண்ணளுர் என்னும் புலவர் உயர்குடிப்பிறந் தோர் பண்பு இது எனக் காட்டவும் பிறர் நாணத்தக்கது