பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறம் காட்டும் அறம் 89 லும் நிலைநிறுத்தப் பாடுபட்டார்கள் என்றும், அவ்வற வாழ்வை மன்னரை முன்னிறுத்திப் பொதுப்படையாக நிலை யான அறத்தைப் புலவர்கள் எவ்வெவ்வாறு காட்டினர்கள் என்றும், அதே புலவர்கள் தனித் தனி மன்னரை முன் னிறுத்தி அவ்வறநெறியை எவ்வெவ்வாறு உலகுக்கு உணர்த் தினர்களென்றும், அவ்வறநெறி வீரமும் ஈரமும் செறிந்து எவ்வாறு விளக்கமுறுகின்றது என்றும், அவற்றை உணர்ந்த மக்கள் எவ்வாறு வாழவேண்டுமென்றும், வீரத்தோடு காதலும் இயைந்ததே உண்மையில் அறவாழ்வாகுமென்றும், தமிழர் இல்லற வாழ்வையே செம்மை திறம்பாத அறமாகக் கொண்டார்கள் என்றும், அவ்வாழ்வின் வழியே அவர்கள் உலகை ஒத்து நோக்கித் தமக்கென வாழாப் பிறர்க் குரியார்களாக வாழ்ந்தார்கள் என்றும், நாடும் நாமும் நலம்பெற எவ்வெவ்வாறு நீர் தடுத்தும் நிலம் புரந்தும் வாழ்ந்து அறம் பெருக்கினர்களென்றும், அத்தகைய அற வாழ்வு என்று நாட்டில் மலர்கின்றதோ அன்றே நாடு நாடாகும் என்றும் கண்டோம். அந்நாள் விரைவில் வந்து விளையுள் பெருகிச் சமுதாய வாழ்வின் வெற்றியினையும் உள உரத்தையும் உணர்வு வளத்தையும் உற்ற பல சிறப்பியல்பு களையும் தருவதாக என வாழ்த்தி அமைகின்றேன். வெ-6