பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தம்மை மறந்த அடியவர்-அமைச்சர் ‘என்று நீ அன்று நான் உன் அடிமை அல்லவோ என்று தமக்கும் இறைவனுக்கும் உள்ள நீண்டநாள் தொடர் பையும் தன்மையையும் தாயுமானவர் நன்கு விளக்கிக் காட்டியுள்ளார். சைவ சித்தாந்த முறைப்படி உலகம், உயிர், ஒன்ருன இறைவன் ஆகிய முப்பொருளுமே என்றும் உள்ளன. முதல்வன் மாரு திருப்பவன்; மற்றவை இரண்டும் மாறி நிலைகெட்டு வரும். எனவே உயிர் இறைவனைச் சிக்கெனப் பிடிக்க அன்று தொட்டு இன்றுவரை முயல்கின் றது. தவத்தால் உயர்ந்த சில உயிர்கள் மிக எளிமையில் தம்மைப் பக்குவப்படுத்திக்கொண்டு இறையருளில் கலக் கின்றன. தம்மைப் பக்குவப்படுத்திய உயிர்கள் தம்மை மறப்பன. அத்தகைய நல்லுயிர் பெற்ற வல்லவருள் வல்லவர் தமிழ் நாட்டில் வாழ்ந்து நம்மையெல்லாம் வாழ் வித்த மாணிக்கவாசக அடிகளாவர். தம்மை மறந்தவரே இறைவனைக் காணமுடியும்; உலகத் தில் உண்மையான தொண்டும் செய்ய முடியும்! யான்", "எனது” என்ற பற்றுக்கள் உள்ளவரை ஒரு பணியும் செய்ய இயலாது. தம்மை மறந்தவர் இரண்டையும் விட்டவர். அவரே வீடு அடைவர். ‘அற்றது பற்றெனில் உற்றது வீடு' என்பர் நம்மாழ்வார். பற்றுக பற்றற்ருன் பற்றினை அப்