பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் உற்றிறுமாங் திருந்தேனெம் பெருமானே அடியேற்குப் பொற்றவிசு நாய்க்கிடுமா றன்றேகின் பொன்னருளே (38.5). என்றும், என்பாலைப் பிறப்பறுத்திங்கு இமையவர்க்கும் அறிவொண்ணுத் தென்பாலைத் திருப்பெருங் துறையுறையுஞ் சிவபெருமான் அன்பால் அகநெகவே புகுந்தருளி ஆட்கொண்டது என்பாலே நோக்கியவாறு அன்றே எம் பெருமானே (38–7) என்றும் போற்றுகின்ருர். இறைவன் குதிரைச் சேவகளுக வந்து ஆண்ட பெருமையை, பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான் கொற்றக் குதிரைமேல் வந்தருளித் தன்னடியார் குற்றங்கள் நீக்கி (8-20). என்றும், மாவார வேறி மதுரைநகர் புகுந்தருளித் தேவார்ந்த கோலங் திகழப் பெருந்துறையான் கோவாகி வந்தெம்மைக் குற்றேவல் கொண்டருளும் பூவார் கழல்பரவிப் பூவல்லிக் கொய்யாமோ (13-20). என்றும், நன்பொன் மணிச்சுவ டொத்தநற்பரி மேல்வரு வானைக் கொம்பின் மிழற்றும் குயிலே கோகழி நாதனைக் கூவாய் (18.6) என்றும் காட்டுவர். அவ்விறைவன் பிட்டுக்கு 967 சுமந்து பாண்டியல்ை அடிபட்ட திறத்தை எண்ணி நைந்து அவர் உள்ளம், - - கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மாய்ை (8-8)