பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மறந்த அடியவர்-அமைச்சர் .95 என்றும் இன்னும் பலவகையிலும் பாடிப் பரவுகின்றது. இவ் வாறு அவர்தம் வாழ்க்கை வரலாறு-இறைவனெடு தொடர்பு பொருந்திய வரலாறு-அவர் வாயாலேயே பல விடங்களில் பாடப் பெறுகின்றது. விரிவஞ்சி மேலே செல்லலாம். இறைவன் தம்மை ஆட்கொண்ட திறத்தினை வியக் கின்ருர் அடிகளார். அப்பாலுக்கப்பாலாக உள்ள ஆண்ட வன்-அரி அயன் என்னும் பெருந் தெய்வங்கள் தேடியும் காணு இறைவன்-நாயிற் கடையாம் நாயே யாகிய தம்மை ஆட்கொண்ட அருட் டிறனை எண்ண எண்ண அவர் உள்ளத் தில் அற்புதமும் அதிசயமும் ஆனந்தமும் பிறக்கின்றன. அந்த வேறுபாட்டை எண்ணி எண்ணிப் பார்க்கின்ருர். அவ் வெண்ணங்களுக்கிடையில் பலப் பல பாடல்கள் உருண் டோடி வருகின்றன. அவற்றுள் ஒருசில காண்போம். அரியொடு பிரமற் களவறி யொண்ணுன் கரியைக் குதிரை யாக்கிய நன்மையும் ஆண்டுகொண் டருள அழகுறு திருவடி பாண்டி யன்றனக் குப்பரி மாவிற் lண்டு கனக மிசையப் பெரு.அது ஆண்டான் அங்கோர் அருள்வழி இருப்பத் தூண்டு சோதி தோற்றிய தொன்மையும் அந்தண கிை யாண்டுகொண் டருளி இந்திர ஞாலங் காட்டிய இயல்பும் மதுரைப் பெருகன் மாநக ரிருந்து குதிரைச் சேவக கிைய கொள்கையும் ஆங்கது தன்னில் அடியவட் காகப் பாங்காய் மண்சுமங் தருளிய பரிசும் (2-35-47) என்று நாம் இதுவரை கண்ட எல்லாவற்றையும் இணைத் துப் பாடியுள்ளார். மேலும், அரியொடு பிரமற் களவறி யாதவன் பரிமா வின் மிசைப் பயின்ற வண்ணமும் (2-115-116) .