பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மறந்த அடியவர்-அமைச்சர் 99 மைஇ லங்குநற் கண்ணி பங்கனே வந்தெ னைப்பணி கொண்ட பின்மழக் கையி லங்குபொற் கிண்ண மென்றலால் அரியை என்றுனைக் கருது கின்றிலேன் (5-92). என எண்ணிப் பாடுகிறது. 'இருதலைக் கொள்ளி எறும்பு என்பது யாரும் சொல்லும் உவமை. இதில் சிறப்பு உண்டோ என எண்ணிப் பார்க்க வேண்டும். இருபக்கம் நெருப்பு-இடையில் அக்கோலில் எறும்பு. அது தப்பிச் செல்ல முடியாது வருந்துகிறது என்பர் அது ஏன் வருந்த வேண்டும்? அக்கொம்பு எங்காவது பொருத் தப்பட்டுத்தானே இருக்கவேண்டும்? அதன் வழியாக அது மெள்ள இறங்கிச் செல்லலாமே? கட்டியிருந்தாலும் கயிற். றின் வழியே ஏறிச் செல்லலாமே? பின் அது வருந்தக் காரண மில்லை. எனவே இவ்வுவமை சிறக்க வழியில்லையே. மணி வாசகர் இவ்வுவமையினையே எண்ணிப் பார்க்கிரு.ர். உண்மை புலப்படுகிறது. ஒரு மூங்கில் குழாய் உள்ளே எறும்பு-அதன் இருபுறமும் தீ. இப்போது அது எங்கே செல்ல இயலும் என எண்ணுகிறது அவர் உள்ளம். அவ்வெறும்பு போன்ற தம் நிலைக்கு இரக்கப்பட வேண்டுமென இறைவனை வேண்டு கிறது. இருதலைக் கொள்ளியின் உள்எறும் பொத்துகினப்பிரிந்த விரிதலை யேனை விடுதிகண் டாய் (6-9), என்பது அவர் வாக்கு, இறைவனுக்கும் தமக்கும் உள்ள தொடர்பினை நினைக் கும் அவருக்குத் தாய், சேய் இவர்தம் பற்றும் உறவும் பளிச்சிடுகிறது. எங்கோ பணிபுரியும் தாய் குழந்தை அழும் ஒலி கேட்டு ஓடிவந்து பாலூட்டுகிருள்: அன்றி வேளையறிந்து: பாலூட்டுகிருள். ஆம்! இறைவனகிய தாயும் இவர்