பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளியம்மாள் வாழ்க்கை வரலாறு


வாய்மையும் சால்பும் விழுமிய குடியும் வண்மையும் திண்ணிய பொறையு
மாய்தரா நெறியும் சிவகுறி செறிந்த மல்லலம் பகிரதிச் செல்வர்
ஆயினர்க் கருளி அன்பரை ஆளும் ஆனந்த நற்சிவகாமி
ஆயிவாழ் தளிசேர் அங்கமா நகர் வாழ் அம்பலவாண மாமணியே (86)

என்றும் பிறவகையிலும் நூறு பாடல்களுள் அங்கபுரத்து அம்பலவாணமாலையில் அதன் ஆசிரியர் திருக்கழுக்குன்றத்துச் சண்முக புராணிகர் ஒரு நூற்றாண்டுக்கு முன் அங்கம்பாக்கம் கிராமத்தினையும் அதன் வளத்தையும் அதில் வாழ்வோர் சிறப்பையும் நன்கு விளக்குகிறார். ஆம்! அந்த அங்கம்பாக்கம் 'நற்றொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து' என்று பெரியோர்கள் பாராட்டிய பெருமைக்குரிய தொண்டை நாட்டுத் தலைநகராகிய கச்சிப்பதிக்குக் கிழக்கே பத்துக்கல் தொலைவில் (பதினாறு கிலோ மீட்டர்) பாலாற்றின் தென்கரையின், வாலாஜாபாத் என்னும் சிறு நகருக்குத் தெற்கே—அப்பாலாற்றைத் தாண்டி அமைந்த சிற்றூராகும். அதில் சுமார் எண்பது வேளாண் குடும்பங்கள் அன்றும் இன்றும் வாழ்ந்து வருகின்றன. கரிகாலன் தன் காலத்தில் தொண்டை நாட்டைச் செழுமைமிக்க நாடாக்கி, கோட்டங்களாகப் பிரித்து, அவற்றுள் வேளாளர்களைக் குடியேற்றினான் என்பது வரலாறு கண்ட உண்மை. இக்கிராமம் இன்று செங்கற்பட்டு (எம். ஜி. ஆர். செங்கை) மாவட்டத்தில் காஞ்சி வட்டத்தில் உள்ளது. இதில் சென்ற நூற்றாண்டில் சிறந்து வளர்ந்து வாழ்ந்த வேளாண் குடும்பத்-