பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

வள்ளியம்மாள் கல்வி அறம்


தில் கந்தசாமி முதலியார், மாணிக்க முதலியார் என்ற இருவரும் காமாட்சி அம்மை எனும் மகளும் சடையப்ப முதலியார் என்பாருக்கு மக்களாக வாழ்ந்தனர்.

இம்மூவருள் மூத்தவருக்கு மகப்பேறு இல்லை. காமாட்சி அம்மையார் இளமையிலேயே கணவனை இழந்து தம்பி மாணிக்க முதலியாருடன் வாழ்ந்து வந்தார். அப்படி வாழ்ந்தமைக்குக் காரணம் தம்பிக்கு இரு பெண் குழந்தைகள் இருந்தமையேயாகும். மூத்த பெண் மீனாட்சி அம்மையாருக்குப்பின் 1900ஆம் ஆண்டில் வள்ளியம்மையார், மாணிக்க முதலியார், கன்னியம்மாள் ஆகியோருக்கு மகளாய்ப் பிறந்தார். மூவருள் மாணிக்கத்துக்கு மக்கள் உள்ளமையின் மற்ற இருவரும் இருவரையும் போற்றி வளர்த்தனர்.

மூத்தவர் மீனாட்சி அம்மாள் தன் அம்மான் சின்னசாமி முதலியாரை மணந்து சிறக்க வாழ்ந்தார். எனினும் மகப்பேறு இல்லை. வள்ளியம்மையார் இளமையிலேயே வயது வந்தவராக, பன்னிரண்டாம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. அவ்வூரிலேயே இருந்த பசுபதி முதலியார் இலக்குமி அம்மாள் ஆகியோரின் மூன்றாவது மகனாரான முத்தியப்பருக்கு அவரை மணம் செய்வித்தனர். அந்த இளம் வயதிலேயே பதினான்காம் ஆண்டு நிரம்பு முன்னே 1914 சூலை 5ஆம் நாள் (ஆனந்த ஆனி 22இல்) ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தார். அவரே இன்று அன்னையின் பெயரால் வள்ளியம்மை கல்வி அறம் நிறுவி, கல்வி நலம் காணும் நம் நிறுவனராவர்.

தமக்கை மீனாட்சி அம்மையாருக்கு மகப்பேறு இன்மையின் ஒரு குலத்துக்கு ஒரு மைந்தனாகப் பெற்ற மகன் போற்றி வளர்க்கப் பெற்றார். இவர்கள் முன்னோர்களுள் ஒருவர் ஒரு காலத்தில் -கும்பின் ஆட்சிதொடங்கிய நாளில் - அந்தப் போர்க் காலத்தில்—(ஆங்கிலேயர் கம்பெனி ஆட்சி) — திருச்சியில் தாசில்தாராக இருந்தாராம். அவர் பெயர் பரமசிவ-