பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளிவிழா ஆண்டின் தொடக்க விழா
15-6-1992 அன்று கல்லூரித் திறப்பு நாளில்
சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்

மாண்பமை திரு. அ. தேவராஜ்
 எம்.எல்.ஏ.

அவர்கள் ஆற்றிய உரை



வள்ளியம்மாள் அறக்கட்டளை சார்பிலே இங்கு நடைபெறுகின்ற வெள்ளிவிழா ஆண்டு தொடக்க விழாவிலே தலைமைப் பொறுப்பேற்க என்னை அழைத்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.

இவ்விழாவிற்கு வந்த எனக்கு இப்போது நிறுவனர் அவர்கள் பொன்னாடை அணிவித்துச் சிறப்புச் செய்தார்கள். இது இயல்பாக நடைபெறும் நிகழ்ச்சி. அதற்கு மாறாக இங்கே நானும் நிறுவனர் அவர்களுக்குச் சால்வை அணிவித்துச் சிறப்புச் செய்த புதுமையான நிகழ்ச்சிக்குக் காரணம் என்ன வென்றால் 1955-57ஆம் ஆண்டில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்துக் கொண்டிருக்கும் போது, எனக்குத் தமிழைப் போதித்தவர் அவர். அவரிடம் படித்து நல்ல நிலையில் இருக்கின்ற நான் அதனை நினைவு கூர்ந்து இச்சிறப்பினைச் செய்ய விரும்பி இதனைச் செயல் படுத்தினேன். மேலும், இங்கு வள்ளியம்மாள் அறக்கட்டளையின் 25ஆவது ஆண்டு தொடக்கத்திற்காக விழா நடைபெறுகிறது என்றால், எவ்வளவு மாணவ மாணவியர்களை ஓடியாடி விளையாட வைத்து, படிக்க வைத்து முன்னேற்றி இக்தகைய ஒரு பெரிய செயலைச் செய்து அருந்தொண்டு ஆற்றியுள்ள உங்கள் நிறுவனர் அவர்களைப் பாராட்டுவது சாலப்பொருந்தும்,