பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளிவிழா

31


தினால் தான் இன்றும் சமூகம் சமூகமாக சென்று கொண்டிருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கண்ணகியால் சிலம்பும் சீதையால் இராமாயணமும் திரௌபதியால் மகாபாரதமும் உருவானது. ஆனால் இன்றோ பெண்களால் பல்கலைக்கழகமே உருவாகிக் கொண்டு இருக்கிற சீரும் சிறப்புமான நிலை விளங்குகிறது.

அரசியலுக்கு வரும் விருப்பம் படைத்த இளைஞனுக்கு அண்ணா கூறும் அறிவுரை, மக்களோடு - இருந்து குறைகளை அறிந்து தெளிந்து தேவையைப் புரிந்து சேவை செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களுக்குச் சேவை செய்ய முனைபவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது அறிவியல், உடலியல், உயிரியல்; சித்தாந்த, வேதாந்த தத்துவம் அல்ல, மக்களைப் புரிந்து கொள்ளக் கூடிய மன நூல் தத்துவமே தேவையானது என்றார். அதையே கடைபிடிக்க வேண்டும். முதலில் நம்மை நாம் புரிந்து கொண்டு பிறகு சுற்றுப் புறத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

என்னைப் பொறுத்தவரை பெண்கள் முன்னேற்றத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து கொண்டு வருகிறேன், முடக்குறிச்சித் தொகுதியில் நான் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறேன். மேலும் அகில இந்திய அளவிலே பெண்கள் முன்னேற்றச் செயலாளராகப் பணியாற்றி வருகிறேன். ஆனால் இந்த இரண்டு பணிகளில் மிகவும் நேசிப்பது மகளிர் அணிச் செயலாளர் பதவி.

படித்த பண்புள்ள உங்கள் முன்பு கூறுவதற்குக் காரணம், எதையும் தாங்கும் இதயம் படைத்த உங்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதால் கூற விரும்புகிறேன். வெள்ளி விழாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிற இக்கல்லூரி மேன்மேலும் தழைத்து வள்ளுவர் கூறியதின்படி எண்ணும்