பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

வள்ளியம்மாள் கல்வி அறம்


எழுத்தும் இரண்டு கண்கள் என்று கொள்வதோடு ஒழுக்கத்தையும், துணிவையும் நீங்கள் பெற்றுத் திகழ வேண்டும்.

இவ்வாறு நான் இந்த அளவிற்கு வருவதற்கு முன் பல சத்திய சோதனைகளை என் வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்தது. ஆனால் துணிவும், ஒழுக்கமும் இருந்த காரணத்தால் சட்டமன்ற உறுப்பினராக உங்கள் முன்பு நிற்கும் வாய்ப்பையும் விருந்தினர் என்ற வாய்ப்பையும் பெற்றுள்ளேன்.

எக்காலத்திலும் அறிவுரை கூறுபவர்கள் இருந்து கொண்டே வருவார்கள். ஆகவே, எத்துணைத் துன்பங்கள் வந்தாலும் அவை அனைத்தும் கடந்து வந்த பின்பு உயர் நிலை அடைவது திண்ணம். உங்கள் கல்லூரியின் குறிக்கோள் 'Think High".—என்றும் உயர்ந்ததையே நினைக்க வேண்டும். ஆகவே எண்ணும், எழுத்தும் கற்று, திறமை, ஆற்றல் பெருமை ஆகிய அனைத்திலும் உயர்ந்தவர்களாக நல்லதைச் செய்யக் கூடியவர்களாகத் திகழவேண்டும்.

இவ்வாறு அனைத்துப் பண்புகளிலும் ஒளி பெற்றுத் திகழும் பெண்மணிகளாக விளங்கவேண்டும். ஆயகலைகள் அறுபத்து நான்கிற்கும் சொந்தக்காரர்களாகத் திகழும் பெண்களாகிய நாம் மேன்மேலும் சீரும் சிறப்பும் பெற்று விளங்கவேண்டும் என்று கூறி முடித்து எந்த உதவி உங்களுக்குத் தேவைப்பட்டாலும் என்னை வந்து அணுகலாம் என்பதை இங்கு தெரிவித்துக் கொண்டு உங்கள் சகோதரி என்ற நிலையில் எனக்கு வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.