பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளிவிழா— தொடக்க நாள்


வெள்ளிவிழா மண்டபம் திறப்புவிழா நாளன்று ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் வாழ்த்துரை. (10-3-93)



சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவதுமே சதா.

கல்வி கற்கும்போது ஒவ்வொருவரும் சரஸ்வதியை வணங்க வேண்டும் என்பது நியதி. சரஸ்வதி வெண்தாமரையில் உள்ளவள். நல்லறிவைத் தரும் சுவடியை வைத்திருப்பவள். தூய்மையான ஆடையை அணிந்திருப்பவள். ஞானக் களஞ்சியமாக இருப்பவள். கல்வி, தூய்மை, அறிவு இவற்றை வளர்ப்பதால் அது சரஸ்வதியின் வடிவமாகப் போற்றப் பெறுகிறது. இப்போது நாம் காணும் எல்லாப் பொருளிலும் கலப்படம். இதில் கூடாது. கல்விவெண்மை - தெளிவு - தூய்மையுடையதாய் இருக்க வேண்டும். கலப்படம் வேறு பொருளில் இருப்பின் அதனை அறிந்து நீக்கிக் கொள்ளலாம். ஆனால் கல்வியில் கலப்படம் கூடாது; கலந்தால் நீக்க முடியாது.

பள்ளியில் படிக்கும்போது (uniform) சீருடை அணிவது ஒற்றுமையை வளர்க்க. அதைவிட முக்கியமானது மனத்திலே- உள்ளத் தூய்மை, ஒரே சிந்தனை, செயல் திறமை ஆகியவை கல்வியில் இருக்க வேண்டும், மனத்தில் எந்தக் குழப்பமும் கூடாது. ஒற்றுமை வெளியில் தோன்ற (uniform) சீருடை அணிகிறோம். உள்ளத்தின் ஒற்றுமை—மனத்தூய்மை பெறுவது கல்வியால் பெற முடியும். கல்விக்கழகு கசடறக் கற்றல்'. எனவே தூய்மையாக—தெளிவாகக் கற்க வேண்டும்,