பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளிவிழா

37


எண்ணிப் பார்க்க வேண்டும். இப்படிக் கூறுவது குறித்து ஆசிரியர்கள் தவறாக நினைக்கக்கூடாது. நானும் ஆசிரியனாகப் பணியாற்றியவன் தான். ஆசிரியர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பழங்காலத்தில் தோன்றிய நூல் வழி அறிந்து கொள்ள முடிகின்றது. கல்வி பற்றிப் பேசும்போது ஆசிரியர்கள் அதற்குரிய தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும். நான் ஆசிரியனாக இருந்தபோது போராட்டம் நடந்தது. கல்வியில் போராட்டம் நுழைவதை நான் விரும்பவில்லை. படிப்பதிலே கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும். இப்பள்ளியும், கல்லூரியும் அப்படி நடக்கும் என்பதில் ஐயமில்லை . திரு. அ.மு.ப. அவர்கள் கடமையறிந்து பணியாற்றுபவர்.

கல்விக்கு முதலிடம் தரும்போது அக்கல்வி பயனுள்ள கல்வியாக இருக்க வேண்டும். கல்வியை 'Passport of job' என நினைக்கக்கூடாது. கல்வி— திறமையை வளர்க்கப் போதிக்கப்படுகிறது; அது எதிர்காலத்தில் நல்ல வாய்ப்பினை அளிக்கும் என நம்பவேண்டும். இந்நிகழ்ச்சியில் என்னைப் பங்கேற்கச் செய்தமைக்குத் திரு. அ. மு.ப. அவர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கின்றேன். பெரிய அளவில் நிறுவனத்தை வளர்த்துள்ள ஐயா அ.மு.ப. அவர்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளைத் தர வேண்டும் என வேண்டி விடைபெறுகிறேன். வணக்கம்.