பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


கேரள மாநில முன்னாள் ஆளுநர் மாண்பமை பா. இராமச்சந்திரன் அவர்களின் சிறப்புரை (10-3-93)



ஜகத்குரு சுவாமிகள் அவர்களே! இளையவர் அவர்களே! கல்வி நிறுவன ஸ்தாபகர் அ.மு. பரமசிவானந்தம் அவர்களே! நிகழ்ச்சிக்குத் தலைமையேற்க வந்துள்ள திருமதி சுப்பிரமணியம் அவர்களே! வணக்கம்.

இந்தப் பள்ளியில் வந்து, வானளாவிய கட்டடங்களைப் பார்த்தபோது நான் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தேன் . நீண்ட நெடுங்காலமாக என்னோடு பழகியவர்— தமிழ்ப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் — என் தமையனாருக்கு மிகவும் வேண்டியவர் — இந்த 25 ஆண்டுக் காலத்தில் மாபெரும் ஸ்தாபனத்தை உருவாக்கியுள்ளார். இதையெண்ணி வாழ்த்துகிறேன்; பாராட்டுகின்றேன்; மேலும் பல வளம் பெற வாழ்த்துகிறேன். இங்கு திரு. சுப்பிரமணியம் வந்திருப்பார்; கல்வி பற்றிப் பேசுவார் என நான் நினைத்தேன். தமிழகத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கல்விப் பணியில் திரு. சுப்பிரமணியம் இருந்தவர். கல்விக்கு மெருகேற்றப்பட்ட காலம்—சுப்பிரமணியம் அமைச்சராக இருந்த காலமாகும். விவசாயி அகலமாக உழுவதைவிட ஆழமாக உழவேண்டும் என்பார். அது தான் சிறந்த கல்வி எனச் சொல்லுவார். நம் நாட்டில் பெரியவர் அவர்கள் சொன்னது போல கல்வி தூய்மையானதாக இருக்க வேண்டும். சமுதாயம் நன்றாக அமைந்தால் ஆசிரியர்கள் பாராட்டப் பெறுவார்கள். கல்விப் பணியைக் கடவுளுக்குச் செய்யும் தொண்டாக ஆசிரியர்கள் கருத வேண்டும். கட்டடங்கள் மட்டும் நமக்குப் பெருமை தருவன அல்ல, ஆசிரியர் தம் கடமையைச் செய்வதும், பெற்றோர்கள் அதைப் பாதுகாத்து வளர்ப்பதும் செய்யத்தக்க கடமைகளாகும். ஆசிரியர்— இறைவனுக்கு ஒப்பானவர். எழுத்தறிவித்தவன் இறைவன் எனப் பெரியோர் சொன்ன சொல் வீணானதல்ல. ஆனால் இப்போது உள்ள ஆசிரியர்கள் அப்படி நடக்கிறார்களா என