பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளிவிழா இரண்டாம் நாள் பள்ளி மாணவர் நாள் (11-3-93)


மாண்புமிகு உயர்திரு டாக்டர் எஸ், சாதிக் (சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர்) தலைமை ஏற்று ஆற்றிய உரை.



மதிப்பிற்கும் உயர்வுக்குமுரிய வள்ளியம்மாள் கல்வி அறத்தின் நிறுவனரும், கல்வித் தொண்டில் நீண்ட நெடுங்காலமாக ஈடுபட்டுச் சேவை செய்து வருகின்றவருமான பேராசிரியர் அ.மு.ப. அவர்களே! மேடையில் அமர்ந்திருக்கும் பெரியோர்களே! மாணவச் செல்வங்களே! வணக்கம்.

நிதி அமைச்சராகப் பொறுப்பேற்று, தமிழகத்தின் சிறந்த நடமாடும் பல்கலைக் கழகமாக விளங்கி ஆட்சியை நடத்திச் செல்லும் திரு. நெடுஞ்செழியன் அவர்கள் இவ்விழாவிற்குத் தலைமை ஏற்று நடத்துவதாக இருந்தார். அவர் நாளை சட்டமன்றத்தில் ஆண்டு வரவு செலவைத் தர வேண்டியுள்ளதால் இன்று வர இயலாமல் போகவே நான் தலைமைப் பொறுப்பு ஏற்கும்படி ஆயிற்று. இப்பொறுப்பை வழங்கிய ஐயா அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

சென்னைப் பட்டினத்தில், குறிப்பாக அண்ணாநகரின் மத்திய பகுதியில் ஒரு சிறந்த கல்லூரியைக் கொண்டு, அதோடு நிறைந்த பள்ளிகளையும் நடத்தி வருகின்ற வள்ளியம்மாள் கல்வி அறத்தை நான் மனமாரப் பாராட்டுகின்றேன், 25 ஆண்டுக் காலமாக நடந்து வந்த செய்தி-