பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

வள்ளியம்மாள் கல்வி அறம்


வள்ளியம்மாள் கல்வி அறம் அனைத்து வசதிகளையும் கொண்டு புகழ்பெற்ற கல்வி அறமாகத் திகழ்ந்து வருகிறது. இத்தகைய சிறந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்ற இக்கல்வி அறத்தின் நிறுவனர் ஐயா அவர்களைப் பாராட்டி, மேலும் மேலும் இக்கல்வி அறம் பல பள்ளிகளையும், பல கல்லூரிகளையும் தோற்றுவித்து, புதிய, புதிய பாடத்திட்டங்களையும், நவீனக் கருவிகளையும் கொண்டு நகர்ப்புறத்திலே ஒரு தலைசிறந்த கல்வி நிறுவனமாக விளங்க வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுகின்றேன். வணக்கம்.