பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளி விழா

65



சாதாரணமாக மாணவ, மாணவிகளைப் பள்ளிகளில் சேர்ப்பது என்றால் பெற்றோர்கள் கல்விக்கூடம் எப்படி நடைபெறுகின்றது; எப்படி. ஆசிரியர் சொல்லிக் கொடுக்கிறார்கள் என ஆராய்ந்து சேர்க்கின்றனர். அந்த அளவில் அந்த நிறுவனம் நடந்து வருவதோடு பெற்றோர் ஆதரவும் கிடைத்துள்ளது நல்ல கல்வி நிறுவனம் எல்லாம் முக்கியமாக நிர்வாகம், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என நான்கு நிலைகளும் நல்ல முறையிலே சேர்ந்து இணைந்து செய்யப்பட்டால் நிறுவனம் மிகமிக நன்றாக இருக்கும். இவ்வாறு நிறுவனங்களும், ஆசிரியர்களும். பெற்றோர்களும் மாணவர்களின் நலனுக்காகப் பாடுபடுகின்றனர். இந்த நான்கும் இணையும்போது தரமான கல்வியைக் கொடுக்க முடியும். அவ்வகையில் இந்நிறுவனம் செயல்படுகிறது. என்பதையும் என்னுடைய பாராட்டுகளைப் பரம சிவானந்தம் ஐயா அவர்களுக்கும் நிறுவன ஆசிரியர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நேரத்தில் அ.மு.ப. அவர்கள் எழுதிய “நல்லவை ஆற்றுமின்” என்ற புத்தகத்தை வெளியிடும் வாய்ப்பும் கொடுத்துள்ளனர். இதில் அவரது பல்வேறு கட்டுரைகள், வானொலியில் கொடுக்கப்பட்டவைகளோடு எல்லாம் இணைத்துப் புத்தகமாக வெளியிட்டுள்ளனர். மிகப்பயனுள்ள, மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய நூலாகும். அதே போல விஞ்ஞான உலகத்திலே வரும்போது பல்வேறு புரட்சிகரமான சமூகத்திற்கு வேண்டப்படாத நிகழ்ச்சிகள் நடைபெறு கின்றன. அவற்றைப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இருந்த தமிழ்ப் புலவர்களின் கருத்துக்களை எல்லாம் கொண்டு,

“நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்

வ—4