பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

வள்ளியம்மாள் கல்வி அறம்


என்ற கருத்தினை அடிப்படையாகச் சொல்லி விளக்கி இருக்கின்றார்கள். மாணவர்களாயினும், பெரியவர்களாயினும், எல்லா நிலைக்கும் இக்கருத்து உதவும். தீமை செய்வதை விட்டுவிட வேண்டும். சாதாரணமாக மனிதருக்கு உள்ள அத்தனை உறுப்புகளும் விலங்குகளுக்கும் உண்டு, மேலும், நமக்குக் கொடுக்கப்படும் மருந்துகள் விலங்கினங்களுக்கும் கொடுக்கின்றனர் எனினும், பகுத்தறிவு என்ற ஆறாவது அறிவைப் படைத்தவன் என்று ஒரு வேறுபாட்டினால் மனிதன் விலங்கினிடமிருந்து வேறுபடுகிறான், ’நல்லவை எவை கெட்டவை எவை' என அறிந்து கொள்ள முடிகிறது.

இந்தப் புத்தகத்தில் நல்ல பல கருத்துக்களைத் தொகுத்துள்ளதோடு அதனை வெளியீடும் வாய்ப்பினை எனக்கு அளித்தமைக்கு நன்றி கூறி அண்ணா நகர் பகுதியிலேயே இந்த நிறுவனம் தழைத்தோங்கி பெரிய தொண்டினை ஆற்றி வருகின்ற ஐயா அவர்களுக்கு எனது பாராட்டினைத் தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.