பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளி விழா

71


அடுத்த வாரத்திற்குள் மனப்பாடம் செய்யுமாறு கூறுவார்கள்,

முதல் வாரம் கிறித்துவர்களின் கொண்டாட்டம் பற்றிய கட்டுரையை எழுதச் சொன்னார்கள். அடுத்த வாரம் முகமதியர்கள் கொண்டாடும் “ஈத்” விழாவைப் பற்றிய கட்டுரை, அடுத்தது 'தீபாவளி' விழா, என்று ஒவ்வொரு மதத்தைச் சார்ந்த கட்டுரையைக் கொடுத்து மாணவர்களுக்கு, ஏற்றத்தாழ்வில்லா ஒரு நிலையை, மதவேறு பாட்டினைத் தவிர்க்கும் நோக்கத்துடன் எழுத வைத்தார்கள். ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை இம்முறை இருந்து வந்தது. இவ்வகையில் பம்பாயில் உள்ள ஒற்றுமை வேறு எங்கும் வராது. இதே போல நம் நாட்டிலும் மதத்தொடர்பான வகுப்புகள் பல ஏற்படுத்தி மாணவர்களுக்கு உரிய கல்வி கொடுக்கப்பட வேண்டும்.

இப்போது நம்முடைய நாட்டில் பக்தியோடு ஈடுபட்டு வரும் ஐயப்பன் கோவிலுக்குச் செல்லுபவர்கள் முதலில் அவ்விடத்தில் உள்ள மசூதிக்குச் சென்று வழிபாடு செய்து திருநீறு பெற்ற பின்னரே செல்கின்றனர். இம்மாதிரி இணைந்து நடைபெறும் இப்பூசைகளில் ஈடுபடுபவர்கள் கூட தற்போது மதக்கலவரத்தில் ஈடுபட்டு, தேசவிரோத சக்திகளுக்குத் துணை புரிகின்றனர். ஆகவே, நாம் சிறு வயதிலிருந்தே மாணவர்களுக்குக் கல்வியின் மூலம் மத ஒற்றுமையைப் புகட்ட வேண்டும்.

அடுத்தது நான் வருமான வரித்துறை அதிகாரி என்ற வகையில், நம் நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றிக் கோடிட்டுக்காட்ட விரும்புகின்றேன். நாம் இன்று வெளிநாட்டோடு போட்டிப்போட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. படித்துப் பட்டம் பெற்றால் மட்டும் போதாது, திறமை பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். அப்போது