பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

வள்ளியம்மாள் கல்வி அறம்


அதைப் பெறுகின்றார்களா என்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம். நாட்டினுடைய எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானால் இது போன்ற சிறந்த கல்வி நிறுவனங்களில் பயில்கின்ற உங்கள் முகத்தைப் பார்க்கும் போது அறியலாம். எதிர்கால இந்தியா எப்படி இருக்கும் என்றும் அறிந்து கொள்ள முடியும்.

எதிர்கால இந்தியாவை—நல்ல இந்தியாவை—ஒற்றுமை மிக்க இந்தியாவை—சாதிசமயப் பேதமற்ற இந்தியாவைப் படைப்பதற்குக் காத்திருக்கிறது என்பதை உங்கள் முகங்களைப் பார்க்கும்போது, என்னால் காணமுடிகிறது. பாரதிகண்ட புதுமைப் பெண்ணாக, இக்கல்லூரியை விட்டு வரவேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை.

கடந்த நாற்பது ஆண்டுக்காலச் சுதந்தர இந்தியாவின் வரலாற்றினைப் பார்த்தோமானால், பெண்களுடைய கல்விமுறை எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. அதற்கு நம்முடைய அரசியல் தலைவர்கள் தொலை நோக்குப் பார்வையோடு புதிய கல்விக்கொள்கையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள் என்பதைக் கூற விரும்புகின்றேன்.

உயர்திரு. நேரு அவர்களும், இந்திரா காந்தி அவர்களும், மறைந்த திரு. ராஜீவ்காந்தி அவர்களும், இன்றைய நாட்டின் பிரதமர் திரு. நரசிம்மராவ் அவர்களும் தொலைநோக்குப் பார்வையோடு பார்த்ததின் விளைவாக 1986-ஆம் ஆண்டு புதிய கல்விக்கொள்கையை இந்தியாவிற்குக் கொண்டு வந்தார்கள். திரு.ராஜீவ்காந்தி அவர்கள், இளைய தலை முறையினர் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக. கல்வியிலே முதன்மை அளிக்கவேண்டும், உலகத்திலே இருக்கின்ற மிகச்சிறந்த கல்வி இந்தியர்க்குக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 1986-ஆம் ஆண்டு கல்விக் கொள்கையை இந்திய நாட்டிற்குத் தந்திருக்கின்றார்கள்,