பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14-3-93 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அண்ணாநகர்த் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். உயர்திரு. செல்லக்குமார் அவர்கள் ஆற்றிய உரை.



மரியாதைக்குரிய விழாத் தலைவர் அவர்களே! வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை எடுத்துக் கூறி அமர்ந்திருக்கின்ற மத்திய தொழில் துறை அமைச்சர் மாண்புமிகு. திரு. அருணாசலம் அவர்களே! வள்ளியம்மாள் கல்வி அறத்தின் நிறுவனர் அவர்களே! பள்ளி, கல்லூரி முதல்வர்களே! ஆசிரியப் பெருமக்களே! பெரியோர்களே!

நான் எதிர்காலம் என்னவென்று தெரியாத நிலையில் தான் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெளியில் வந்தேன். ஆனால் பொதுவாழ்க்கையில் என்னை ஈடுபடுத்திக் கொண்ட பின்புதான் இந்த நாட்டிற்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்னவென்று சிந்தித்துப் பார்ப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமானது பள்ளி, கல்லூரி வாழ்க்கை. அவ்வாழ்க்கையில் பொறுப்புணர்ச்சி ஏற்படுவதில்லை. இப்பொழுது நீங்கள் கடமையாற்ற வேண்டிய கட்டாய நிலையில் இருக்கின்றீர்கள்.

"ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்பது போல, பட்டங்களும் பாடப் புத்தகங்களும் நம் வாழ்க்கைக்கு உதவியாக இருக்குமா என்று சொன்னால் அது நிச்சயமாக இல்லை. எனவேதான் 21ஆம் நூற்றாண்டிற்கு நம்மை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு செயலாற்றிய எங்கள் தலைவர் மறைந்த திரு. இராஜீவ்காந்தி அவர்கள், தொழிற்கல்வியோடு சேர்ந்து வாழ்கின்ற முறையோடு சேர்ந்த ஒரு கல்வியையும் கல்வித்திட்டத்தில் கொண்டுவர வேண்டுமென்பதற்காகத்தான் உலகத்திலே உயர்வாகக் கருதப்படும் மனிதவள மேம்பாட்டுத்துறையை நிறுவினார். அந்தத் துறைக்கு, எதிர்காலத்தில் நாட்டு மக்களில் யார் வழி நடத்திச் செல்வார்கள்? எதிர்கால இந்தியாவுக்கு, எதிர்கால இளையதலைமுறைக்கு நீண்ட நெடுங்காலம் எடுத்துச் செல்லு-