பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

வள்ளியம்மாள் கல்வி அறம்


கின்ற ஒருவரே அமைச்சராக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தினை, கருத்தினை எடுத்துக் கூறினார்.

நம் வாழ்க்கை குறுகிய காலத்தில் முடிந்துவிடும். நமக்குப் பின்னால் இப்பொறுப்புணர்வு ஒரு பெரியவரிடம் கொடுக்கப்படவேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை, திரு. இராஜீவ்காந்தி முதன்முதலாக அந்தத் துறையைத் தோற்றுவித்தபோது இன்றைக்கு இந்தியாவை உலக நாடுகள் எல்லாம் போற்றுகின்ற அளவிற்கு உயர்த்திய நம் பிரதமர் திரு. நரசிம்மராவைத்தான் அமைச்சராக நியமித்தார்கள். அந்தத் துறை மேம்பட்டு மனித ஆற்றல் மிக்க துறையாக விளங்குவதை அறிஞர் பெருமக்கள் பாராட்டுகின்றார்கள்.

கல்விக்காக இந்த அரசு பல கோடி ரூபாய் செலவு செய்து இந்நாட்டின் எதிர்கால வளத்திற்கு 'அறியாமையைத்தான் போக்கவேண்டும்' என்ற நல்ல கருத்தினைச் செய்து காட்டியிருக்கிறது. இந்த நிலையிலே நாடு சென்று கொண்டிருக்கும் போது, நமது கடமை என்னவென்று பார்க்கும்போது சமுதாயத்திற்கு, நமது வாழ்க்கைக்கு, அதாவது சொந்த வாழ்க்கையை முன்னேற்றும்போது தானாகக் குடும்பம் முன்னுக்கு வருகிறது. அதன் காரணமாகத்தான் சொன்னார்கள் அந்தக் காலத்தில்.

“வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்
குடியுயரக் கோனுயரும்

என்று. எனவே, ஒவ்வொரு தனிமனிதனும் தனக்குள்ளே தெரியாதிருக்கின்ற ஆற்றலை வெளிப்படுத்தவேண்டும். நமது குடும்பம் முன்னேற, சமுதாயம் முன்னேறும்; சமுதாயம் முன்னேற நாடு முன்னேற்றம் அடைகின்றது. நாட்டு