பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளிவிழா ஆறாவது நாள் -
வாழ்த்தியல் விழா


தமிழக அரசின் சட்டமன்ற உறுப்பினர் மாண்பமை திருமதி. கவிநிலவு தர்மராஜ் அவர்கள் ஆற்றிய உரை.



வள்ளியம்மாள் கல்வி அறக்கட்டளையினுடைய வெள்ளி விழா நிகழ்ச்சியினுடைய நிறைவு நாள் தலைவர் மதிப்புக்கும், மரியாதைக்குமுரிய உயர் திரு. நீதிபதி. பு.ரா.கோகுல கிருஷ்ணன் அவர்களே! இங்குச் சிலை திறந்து, விலை மதிப்பில்லாப் பெரும்பணியாற்றி அமர்ந்திருக்கும் பேரன்பிற்குரிய மகளிர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் திருமதி.கோ.வசந்திதேவி அவர்களே! வாழ்த்துரை வழங்கவிருக்கிற திரு. எஸ். பரமசிவம் அவர்களே! வள்ளியம்மாள் கல்வி அறத்தின் நிறுவனர் திரு அ.மு.பரமசிவானந்தம் அவர்களே! பெற்றோர்களே தாய்மார்களே! மாணவ மாணவியர்களே!

எனக்கு நிறுவனர் அவர்களைப் பார்க்கும்போது மிகவும் வியப்பாக இருக்கிறது, நான் டில்லிக்குச் சென்றபோது ஆக்ராவில் மும்தாஜுக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மகாலைக் கண்டு வியப்படைந்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்தபோது தன் தாய்க்காகச் சிலையைத் திறந்த நிறுவனரைக் கண்டு மகிழ்கிறேன்.

“வள்ளியம்மாள் பெண்கள் கல்லூரி என்று சொல்லும் போது பெண் சமுதாயத்திற்கே இது பெருமை தரக்கூடியது. பெண்கள் எதற்கும் உதவாதவர்கள் என்று இழிவாகப் பேசிய காலம் மாறி இன்று பெண்களே நாட்டின் கண்கள் என்று புகழ்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.