பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளி விழா

93


வள்ளுவத்திலே புதுமையான குறள் என்று சொல்லி ஒரு சில குறளுக்கு நான் விளக்கமளித்து இருக்கிறேன்.

“தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்”

என்று சொல்லியிருக்கிறான். இதே குறளை ஆண்மைக்கும் சொல்லியிருக்கலாம்.

பெண்ணைப் பொறுத்தவரையில் பிறப்பது முதல் இறப்பது வரை ஆணுக்கு அடிமையாகப் படைக்கப் பட்டிருக்கிறார்கள். இக்கொடுமையை மாற்ற அடிப்படைக் கல்வி வேண்டும். கல்வியினால் தான் அறிவு வளருகிறது, அவ்வறிவை வளர்க்கின்ற ஊருணியாக இக்கல்லூரி திகழ்கிறது.

“தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”

என்கிறான் வள்ளுவன். இக்குறளுக்கு வேறொரு விளக்கத்தை நான் என் நூலில் கூறியிருக்கிறேன், தெய்வத்தைத் தொழாது, கணவனால் தொழப்படுகின்ற பெண், பெய் எனச் சொல்ல மழை பெய்யும் என்று பெண்களுக்கு முன்னிலை கொடுத்துச் சொல்லியிருக்கிறேன்.

இவ்வாறு பெண்களை இழிவுபடுத்தியே பேசிக் கொண்டிருக்கிற காலத்தில் பெண்களுக்காகவே, தன் தாயின் பெயரால் இக்கல்லூரியை நிறுவி, பெண்களுக்குப் பெருமை சேர்ப்பதைப் பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

விஞ்ஞானம் விரிந்து, மெய்ஞ்ஞானம் மெலிந்து, அஞ்ஞானம் அழிந்து, தஞ்ஞானம் தழைத்து, எஞ்ஞான்றும் எழுந்து நிற்கக் கூடிய இந்த ஞாலத்திலே, அது விரிக்கும் காலத்தின் கோலத்திலே, நம்முடைய உள்ளத்தின்