பக்கம்:வெள்ளை யானை.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருகுகந்தரம் 0 26 ரிஷிபத்தினிகள் கொண்டு வந்து சிதறிய காட்டுப் பூக்கள். அவளே பாரமாகி அவளையே அழுத்தும் பிரமை ! கூரையில் ஒரு சிலந்திக் கூடு. அவள் மனச்சிக்கல்போல் அதுவும் பெரிதாகிப் படர, அதன் நடுவில் ஒட்டிக் கொண்டிருந்த சிலந்தியும் உருண்டு திரண்டு ஒரு ராட்சதச் சிலந்தியாக வளர, தான் ஓர் ஈயாக மாறி வலையில் சிக்கிக் கொள்ள, சிலந்தியின் வளைந்த இடுக்கிப் பற்கள் தன்னை நெருங்கிவர அவள்பரிதாபமான இசிப்போடு கதறி மயங்கி விழுகிறாள். சில் லென்று குளிர்ந்த நீர் முகத்தில் விழக் கண் திறந்து பார்க்கிறாள் அகல்யா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/16&oldid=916224" இருந்து மீள்விக்கப்பட்டது