பக்கம்:வெள்ளை யானை.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருகுகந்தரம் C 38 'எந்த உறுப்பின் தினவுக்கு அடிமையானாயோ, அந்த உறுப்பை இழப்பதோடு, எதைத் தேடி வந்தாயோ அதுவே உன் உடம்பாக..!' - என்று இந்திரனைச் சபித்தான். வச்சிரப் படையொடுங்கி வானவர்கோன் கொச்சைப்பட்டு நின்றான். அவன் ஆண்ட தேவருலகம் நொறுங்கி அவன் தலைமீதே விழுந்த அதிர்ச்சி! எல்லா உலகின் கண்களும் அவனுடைய நிர்வாணக் கோலத்தையே உற்றுப் பார்ப்பதைக் கண்டு கூசி நடுங்கினான். கெளதமன் அக்கினிக் கண்களால் அகலியைப் பார்த்து. வாயு பrா நிராஹாரா தப்யந்தீ பஸ்மசாயினி - என்று சாபத்தைத் தொடங்கினான். அகலிகை குறுக்கிட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/28&oldid=916248" இருந்து மீள்விக்கப்பட்டது