பக்கம்:வெள்ளை யானை.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47 வெள்ளை யானை

'அகலிகை பாற்கடலில் பிறந்தவள், இவள் மகன் சதாநந்த ரிஷி

- சிவபுராணம்

'அகலிகை இந்திரத் துய்ம்மன் எனும் மகத நாட்டரசன் தேவி. இவள் வஞ்ச இந்திரனுடன் களவுப் புணர்ச்சி செய்ததின் நிமித்தம் நாட்டை விட்டுக் கணவனால் அகற்றப்பட்டனள்

- அபிதான சிந்தாமணி

ஆசிரமக் கட்டுப்பாட்டில் வளர்ந்த ரிஷி பத்தினியாக வாழ்க்கைப்பட்ட, கற்புக்கரசி களான பஞ்ச கன்னியர்களில் ஒருத்தியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அகலிகை, - வந்தவன், தன் கணவன் அல்லன் என்பது தெரிந் திருந்தும்-தானே விரும்பி இந்திரனிடம் ஏன் சோரம் போனாள் என்பது இதுவரை இலக்கிய வாதிகளால் விடுவிக்க முடியாத புதிர்.

சிலர் அவளுடைய அறியாமை என்றும், சிலர் சந்தர்ப்ப சூழ்நிலை என்றும் காரணம் கூறுகின்றனர். இந்தப் புதிர் இலக்கியவாதி களின் கற்பனையைத் தூண்டிவிட்டு, சுவையான புதுப்புனைவுகளுக்கு வழி வகுத்தது. சர்ரியலிசக் கற்பனை என் முயற்சி.

நான் மிகவும் நிதானமாகச் சிந்தித்து அகலிகை பற்றிய எல்லா ஆதாரங்களையும் தேடிப்பிடித்து, இக் காப்பியத்தை எழுதியிருக் கிறேன். இக் கற்பனை என் உள்ளத்தில் முதன்முதலில் கருக் கொண்டபோது, ஆங்கிலப் பேராசிரியரும், கவிஞரும், தமிழகத்தின் தலைசிறந்த புதுக் கவிதைத் திறனாய்வாளரும், சர்ரியலிசத்தைத் தமிழ்க் கவிதைச் சுவைஞர்களுக்குத் தமது சிறந்த நூலின் மூலம் அறிமுகப்படுத்தியவருமான டாக்டர் பாலாவோடு