பக்கம்:வெள்ளை யானை.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏகலைவர் அறிக்கை


நெற்றிக் கண்ணைக்
காட்டாதீர்கள்.
எங்களை உங்களால்
எரிக்க முடியாது.

உங்கள் தோளிலிருக்கும்
பீதாம்பரம்
நழுவுகிறதே என்பதற்காக
நாங்கள் இன்னும்
கோவணத் தோடு
நின்று கொண்டிருக்க முடியாது.

நீங்கள் தார்ப் பாதையில்!
நாங்கள்
சரளைக்கல் பாதையில்!
பந்தயத் தூரத்தில்
கொஞ்சம் சலுகை கேட்பதில்
என்ன தப்பு?

நீங்கள் -
எங்கள் மேனியில்
இரக்கமின்றி இழுத்த
சாதிச் சூட்டுத் தழும்புகளை,
நாங்கள் இப்போது