பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 í மண்டபத்திற்கு அருகே சூரிய சந்திரர்களுக்கும் தனித்தனிக் கோயில் அமைத்திருக்கிறார்கள். புலியைக் கொல்லும் சாலாவின் சிற்பம்தானே ஹொய்சல மன்னர்களின் முத்திரை. இந்த சிற்பவடிவம் ஒவ்வொரு வாசலிலுமே இருக்கிறது. கேதாரேஸ்வரர் கோயிலின் சுவர்கள் (ք (ԼՔ வதுமே ஒரே சிற்பவடிவங்கள்தாம். கோயிலின் வெளிச் சுவர்களில் வரிசைவரிசையாய் யானைகள், யாளிகள், அன்னங்கள் இன்னும் எண்ணற்ற தெய்வவடிவங்கள் கோயிலின் தென்புறத்தில் அழகான நர்த்தன வினாயகர் ஒருவர் பெரிய வடிவிலே நிற்கிறார். நுணுக்க வேலைப்பாடு கள் நிறைந்த இந்த வடிவங்களை காணும்போது நாம் ஒரு அதிசய உலகத்திலே உலவுவது போன்ற பிரமையே ஏற்படும். கோயில் உள்ளேயும் எண்ணற்ற வடிவங்கள் எல்லாம் பேலூர் மாளிகை சிற்பவடிவத்தைப் போல சிறந்தவைகள் அல்ல என்றாலும், நல்ல அழகு வாய்ந்த வைகளே. இரணியனை உடல் கிழிக்கும் நரசிம்மன், கோவர்த்தன மலையை குடையாக எடுத்து ஆநிரையைக் காக்கும் கண்ணன், துவாரபாலகர் வடிவங்கள் எல்லாம் சிற்ப உலகில் பிரசித்தி பெற்றவை, ஆனால் எல்லாவற்றை கம் துரக்கி அடிக்கும் வகையில் அமைந்திருக்கும் நர்த்தன சரஸ்வதி கலை உலகிலேயே ஒரு அற்புதம். இத்தனை சிற்ப வடிவங்களிடையே தான் ஹொய்சலேஸ்வரரும் கேதா ரேஸ்வரரும் லிங்க வடிவில் கருவறையில் உருவின்றி நின்ற உருவாய் கருவின்றி நின்ற கருவாய் எழுந்தருளி இருக்கின்றனர். இக்கோயில்கள் கட்டுவதற்கு கல் எல்லாம் பக்கத்தில் உள்ள புஷ்பகிரி என்ற மலையில் இருந்தே கொண்டு வரப்பட்டிருக்கின்றன, அவை எல்லாம் கடின மான கருங்கல் அல்ல. சிற்றுளி வேலைக்கு ஏற்ற மெதுவான கற்களே. ஹொய்சல மன்னர்கள் கட்டிய கேயில்களில் எல்லாம் அளவில் பெரியது இந்த ஹொய்சலஈஸ்வரர் கோயிலே. இந்த ஹொய்சல ஈஸ்வரரே கேதாரேஸ்வரும் சமய குரவர்