பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 குள் வந்திருக்கின்றது. இந்த ஹொய்சல மன்னர்களில் ஒருவனே மூன்றாம் வல்லாளன். அவன் கண்ணனுாரை விட்டுத் திருவண்ணாமலைக்கே சென்றிருக்கிறான். அங்கு உண்ணாமுலைப்பட்டிணம் என்று ஒரு நகரை நிர்மானித்து அங்கிருந்தே ஆண்டிருக்கிறான். இப்படித்தான் ஹொய்சல மன்னர்கள் சரித்திரம் வளர்ந்து தேய்ந்திருக்கிறது. இனி நாம் வீரநரசிம்மன் கட்டிய ஹொய்சவஈஸ்வரர் கோயிலுக்கே செல்லலாம். காரில் சென்றால் கோயிலின் வடக்கு வாசலிலே போய் நிற்கும். அங்கு காரை விட்டு உள்ளே நுழைந்தால் கோயில் பிரகாரம் முழுவதும் சிதைந்த சிற்பங்கள் எண்ணிறந்தவை இருக்கும். புதை பொருள் ஆராய்ச்சியாளர் அவைகளை எடுத்து ஒழுங்குப் படுத்தி அடுக்கி வைத்திருப்பர். இந்தப் பிரகாரத்தைக் கடந்தே கோயிலுக்குச் செல்ல வேண்டும். இங்கு இரண்டு கோயில்கள் உண்டு. ஒன்று ஹொய்சலலேஸ்வரன் கோயில். மற்றொன்று கேதாரேஸ்வரர் கோயில். சோமநாதபுரத் திலும், பேலூரிலும், கேசவனுக்குக் கோயில் கட்டிய ஹொய்சலர்கள், தங்கள் தலைநகரிலே சிவபெருமானுக்கே இரண்டு கோயில்களை அடுத்தடுத்துக் கட்டியிருக்கிறார்கள். இங்கு கோயில்களுக்கு எதிரே நந்தி மண்டபங்கள் இரண் டைக் கட்டி, பெரிய நந்தியையும் கல்லில் உருவாக்கி வைத் திருக்கிறார்கள். நந்தி மண்டபத்துத் தூண்கள் எல்லாம் நல்ல சிற்பவேலைப்பாடு அமைந்தவை. ஹொப்சலேஸ்வரர் கோயிலுக்கு நான்கு வாயில்கள், கிழக்கே இரண்டு, வடக்கே ஒன்று, தெற்கே ஒன்று. கோயிலுக்கு தென்புறமே மன்னனின் மாளிகை இருக்கிறது. அதனால் மன்னன் வரும் வழியாக தெற்கு வாசல் மிகச் சிறப்பாய் அமைக்கப் பட்டிருக்கிறது. கோயில் வாயிலின் மேல் முகப்பில் சிற்ப வடிவங்கள் சிறப்பாய் இருக்கின்றன. ஆடும் பெருமானை வாயில் முகப்பில் அமைத்து, இரண்டு பக்கமும் மகர வளைவுகள் அமைத்திருக்கிறார்கள். வருணன் அவன் தன் து ைன வி யோ டு வடிக்கப்பெற்றிருக்கிறான். நந்தி