பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 அவனே பூரீரங்கம் வரை வந்து அங்கு கோயில் கொண் டிருக்கும் அரங்கநாயகன் கோயிலில் ஒரு மண்டபம் கட்டி இருக்கிறான். இந்த வீர நரசிம்மன் மகனே சோமேஸ்வரன். இவன் பூரீரங்கத்தை அடுத்த சமயபுரத்தை தலை நகராகக்கொண்டு, தமிழ் நாட்டில் தான் வெற்றி பெற்ற இடங்களை ஆண்டிருக்கிறான். அந்த நகரத்திற்கு விக்கிரமபுரம் என்றும் பெயர் சூட்டியிருக்கிறான். அந்த விக்கிரமபுரமே இன்று சமயபுரம் பக்கத்தில் உள்ள கண்ணனூர் என்கின்றனர். இன்னும் இவன் திருவானைக்காவில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோயிலில், தனது குடும்பத்தினர் ஞாபகார்த்தமாக பல லிங்கங்களை பிரதிஷ்டை செய்திருக்கிறான். அவைகளே வல்லாள ஈஸ்வரர், பதுமானி ஈஸ்வரர், வீரநரசிங்க ஈஸ்வரர் சோமாளி ஈஸ்வரர் என்பவை என்று சொல்லப்படுகின்றன. ஜம்புகேஸ்வரர் கோயில் வாயிலில் உள்ள ஏழுநிலை கொண்ட கோபுரம் இந்த சோமேஸ்வரனாலேயே கட்டப் பட்டிருக்கிறது. கண்ணனுாரில் இவன் கட்டிய கோயிலே போஜேஸ்வரர் கோயில். இவன் சார்வபெளமன், துலாபுருஷன், ரத்னதேனு என்று பல அபிஷேகப் பெயர் களையும் சூட்டிக் கொண்டிருக்கிறான் என்று சரித்திர ஏடுகள் சொல்கின்றன. இந்த சோமேஸ்வரனின் மகனே வீரராமநாதன். இவன் காலத்திய கல்வெட்டுக்கள் மூன்று உண்டு. அவை 1267, 1270, 1271-ம் வருஷத்தில் வெட்டப் பட்டவை. அவை பூரீரங்கத்திலும் கண்ணனூரிலும், இருக்கின்றன. திருவெள்ளறையில் உள்ள நாலுமூலைக் கேணி என்ற வணிகன் கிணறு பழுது பார்க்கப்பட்ட விவரம் ஒரு கல்வெட்டில் கூறப்படுகிறது. இவனே ரங்கநாதனுக்கு ஒரு மணிமகுடத்தையும் இரண்டு கவரியையும், ஒரு காளாஞ்சியையும் கொடுத்திருக்கிறான். இந்த வீரராமா நாதன் மகனே வீரவிஸ்வநாதன். இவன் 1293-முதல் 1294 ..வரையே ஆண்டிருக்கின்றான். இவனுக்குப் பின்னால் ஹொய்சல சாம்ராஜ்யம் விஜயநகர மன்னர்களின் ஆட்சிக் &*38一6