உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. சிருங்கேரி வித்யாசங்கரர்


இந்நில உலகில் மக்கள் மாத்திரமே அல்லாமல் மற்ற எல்லா உயிர்களுமே வாழ மழை மிகவும் இன்றியமை யாதது. காலா காலத்தில் பெய்யும் மழையைப் பருவமழை என்போம். ஆனால் இந்த மாரி வளம் குன்றி, சில காலம் மழை பெய்யாது போவதும் உண்டு. அப்போதெல்லாம் மக்கள் தவிக்கின்ற தவிப்பையும் அறிவோம். ஏதோ இறை அருளினால், இறைவன் இஷ்டப்பட்டபோது பெய்விக்கும் மழையை, மனிதன் தான் விரும்பியபோது பெற முயற்சித்