பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 என்று யார் சொன்னது. நான் அங்கு சென்று தரிசனம் செய்து விட்டுத்தானே திரும்பி வருகிறேன். அங்கு கோயில் கொண்டிருப்பவன் நீர் வணங்கும் பரந்தாமனே வாரும் என்னுடன்' என்று அழைத்திருக்கிறார் புண்டரீகருக்கோ ஒன்றும் சொல்ல முடியவில்லை. கிழவேதியரை முழுதும் நம்பவும் அவர் தயாராக இல்லை. ஆதலால் கண்ணை ஒரு. துண்டால் கட்டிக்கொண்டே கிழவேதியர் கையைப் பிடித்துக் கொண்டே கோயிலுக்குள் நடந்திருக்கிறார். கோயிலின் க ரு வ ைற சென்றதும், கிழவேதியராக வந்த விஷ்ணுவோ அவசரம் அவசரமாக அங்குள்ள லிங்க வடிவத்தை ஏந்தி நிற்கும் ஆவுடையார் பேரிலேயே ஏறி நின்று கொள்கிறார். புண்டரீகரும் அவர் கட்டை அவிழ்க் காமலேயே அங்குள்ள வடிவத்தைக் கையாலேயே தடவிப் பார்க்கிறார். புண்டரீகரது கரங்களுக்கு பரந்தாமன் அணிந்திருக்கும் மணிமகுடம் தெரிகிறது. கைகளிலே ஏந்தியுள்ள சங்கு சக்கரம் தெரிகிறது. கையில் பிடித் திருக்கும் கதை தெரிகிறது. இடையில் உடுத்திய பீதாம்பரம் தெரிகிறது. அதன் மேல் புரளும் பொன் அரைஞாண் தெரிகிறது.இத்தனையும் தொட்டுத்தொட்டுப் பார்த்து அங்கிருப்பவர் மகாவிஷ்ணுவே என்று உறுதிப் படுத்திக் கொண்டு கண்கட்டை அவிழ்த்திருக்கிறார். அப் போது தெரிகிறது அங்கு கோயில் கொண்டிருப்பவர் லிங்க வடிவில் உள்ள சிவனே என்றும் அவருக்குரிய பீடமாகிய ஆவுடையார் பே ரி லே த ன் இந்தப் பிரசன்ன வெங்கடேசன் ஏறி நிற்கிறார் என்றும். ஆம் உண்மையி லேயே அவரது கண் அன்றுதான் திறக்கப்படுகிறது. சிவன் வேறு, விஷ்ணு வேறு அல்ல இருவரும் ஒருவரே என்ற உண்மையையும் விளங்குகிறது புண்டரீகருக்கு. இதற்கு எதிர்க்கதை ஒன்றும் இருக்கிறது. அந்தக்கதை இதுதான். பண்டரிபுரத்திலே ஒரு செல்வச் சீமான், அவருக்கு நீண்ட நாளாய் புத்திரப்பேறு இல்லை. அதற் சாகப் பாண்டுரங்கனை வழிபட்டு வந்திருக்கிறார். தனக்கு