பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 இல்லை. இந்த நந்திக்கு தென்கீழ் பக்கம் இருப்பதே மதங்கபருவதம். இந்தப் பெயரை எங்கேயோ கேட்டிருக் கிறோமே என்று நினைவு வரும். ஆம். இராமாயணத்தில் கிஷ்கிந்தையில் சுக்ரீவனும் அநுமனும் ஒளிந்திருந்த மலையை வான்மீகர் மதங்க பருவதம் என்றுதானே குறிப் பிட்டிருக்கின்றார். ஒன்று சொல்ல மறந்து விட்டேனே இந்தப் பிராந்தியமே அந்த இதிகாச கிஷ்கிந்தை என்றும், இங்குதான் வாலி, சுக்ரீவன் இருந்து அரசுசெய்திருக்கிறார் கள் என்றும் வரலாறு கூறுகிறது. வாலி ஒரு ராrசனைக் கொன்று அவன் குருதியை மதங்க ரிஷியிருந்து தவம் செய்த இடத்தில் படிய விட்டதனால் மதங்கர் கோபம் கொண்டு இம்மலைப் பக்கம் வாலி வந்தால் அவன் தலை சிதறக் கடவது என்று சாபமிட்டிருக்கிறார். அதனாலேயே ராமன் வரும் வரை, சுக்ரீவன் இங்கு பத்திரமாக வாழ முடிந்திருக்கிறது. நமக்கெல்லாம்தான் மதங்கரது சாபம் இல்லையே நாம் அந்த மதங்க மலை மீதே ஏறலாம். மலைசிகரத்தில் இருப்பது அச்சுதராயர் கோயில். அங்கு கோயில் கெண்டிருப்பவர் மகாவிஷ்ணு. நல்ல கருங் கல்லிலே உருவான பரசுராமராக இவர் இருக்கிறார். இக்கோயிலை 1539-ல் அச்சுதராயன் கட்டியிருக்கிறார். அதனாலே தான் இக்கோயில் அச்சுதராயர் கோயில் என்று பெயர் பெற்றிருக்கிறது. இங்கிருந்து வடக்கு நோக்கி நடந்து ஆற்றை நோக்கிச் செல்லும் படிகளில் ஏறி நடந் தால் இங்கொரு கோதண்டராமன் கோயிலையும் அனந்த சயனர் கோயிலையும், வராகர் கோயிலையும் காணலாம். இங்குதான் துங்கபத்திரை உத்தரவாகினியாக ஓடுகிறது. அந்தத் தீர்த்தத்தையே சக்கர தீர்த்தம் என்கின்றனர். அவகாசம் இருந்தால் நாமும் அங்கு அத்தீர்த்தத்தில் மூழ்கி நம் வினைகளைக் கலையலாம். இவற்றையெல்லாம் கடந்து மேலே சென்றால் ஒரு குகை தென்படும். அந்தக் குகையிலேயேதான் சுக்ரீவன் ஒளிந்து வாழ்ந்திருக்கிறான். அதனையே சுக்ரீவன் குகை என்கின்றனர். இங்கிருந்து தான் துங்கைபத்திரையைக் கடக்க ஒரு கல்பாலம் கட்டி