பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$50 இக்கோயிலில் உள்ள லிங்கத் திருவுருவிற்கு ஆவுடையார் கிடையாது. லிங்கத் திருவுருவம் சிதைந்திருக்கிறது. இங்கு ஒரு சமணக் கோயிலும் இருக்கிறது. சிறப்பாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இத்தனை கோயில்களையும் சுற்றிப் பார்த்து வரும் போது, நம் நெஞ்சை ஏதோ ஒன்று அழுத்தும். கிட்டத் தட்ட ஆயிரத்து இருநூறு வருஷங்களுக்கு முன்னர் சாளுக்கிய சாம்ராஜ்யம் உன்னத நிலையில் இருந்தபோது கட்டப்பட்ட இக்கோயில்கள் இன்று கவனிப்பாரற்று, புதர் மண்டியும், இடிந்தும் கிடக்கின்றனவே. இக்கோயில்கள் எல்லாம் புதைபொருள் இலாக்காவின் மேற்பார்வையில் இருப்பதாக விளம்பரப்படுத்தியிருந்தாலும், அப்படி மேற்பார்வை மிகவும் மேல் எழுந்த பார்வையாகத்தான் இருக்கும் போலிருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றும். அதே சமயம் நம் தமிழ் நாட்டுச் சிற்பி ஒருவன் வந்து இக்கோயில்களில் பிரதான கோயிலான விருபாஷர் கோயிலை உருவாக்கியிருக்கிறானே, அந்தச் சிற்பி திரிபுவனாச்சாரியாருக்கு வணக்கம் செலுத்துவதற்காகவே ஒரு நடை ந்டக்கலாமே என்றும் எண்ணுவோம். ஆம் அந்தத் திரிபுவனாச்சாரியருக்கு வணக்கம் செலுத்தி விட்டே திரும்புவோம்.