பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. ஐஹோளே துர்க்கை கானும் ஒரு நண்பரும் சில வருஷங்களுக்கு முன் கம்பன் பிறந்த தேரெழுந்துாருக்குச் சென்றிருந்தோம். அங்குள்ள கம்பன் மேடு, ஆமருவியப்பன் கோயில் எல்லாம் செல்லுமுன் அங்குள்ள வேதபுரீசர் கோயிலுக்குச் சென் றோம். அங்குள்ள இறைவன் சம்பந்தரால் பாடப் பெற்றவன் ஆயிற்றே, அலையார் புனல் சூழ் அழுந்தைப் பெருமானை நினைந்து அவன் புகழைப் பாடிக் கொண்டே கோயிலுள் சென்றோம். கோயில் தருமகர்த்தர் ஒருவரும் அர்ச்சகர் இருவரும் எங்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். நாங்கள் மகா மண்டபம் சென்றதும் அங்குள்ள ஒரு பீடத்தில் சமய குரவர் நால் வரையும் செப்புச் சிலையாக நிறுத்தியிருப்பதைப் பார்த் தோம். அங்கு சமய குரவர்களை வரிசைப்படுத்தி இருந்த முறை நண்பருக்கு கோபமூட்டிற்று. அங்கு மு த லி ல் மணிவாசகரையும் பின்னர் சம்பந்தரையும் அதன் பின் நாவுக்கரசரையும் சுந்தரரையும் வரிசைப்படுத்தி வைத் தார்கள். நண்பர் சொன்னார் இந்த முறைவைப்பு தப்பு. காலத்தால் மற்ற மூவருக்கும் பிந்திய மணிவாசகரை முதலில் வைத்திருக்கக் கூடாது. அவரை எடுத்து கடைசியில் வையுங்கள் என்றார். அர்ச்சகர்கரும் தருமகர்த் தரும் அப்படிச் செய்து விடவேண்டியதுதானே என்று என் முகத்தைப் பார்த்தார்கள். நான் சொன்னேன், அப்படி ஒன்றும் செய்ய வேண்டாம், காலத்தால் மணிவாசகர் மூவருக்கும் முந்தியவரா, பிந்தியவரா என்று விவாதமே இன்னும் தீர்ந்தபாடாக இல்லை. காலத்தால் அவர் பிந்தியவராக இருந்தாலும் சீலத்தால் அவர் மூவருக்கும் முந்தியவர் என்று காட்டத்தானோ என்னவோ அந்த அழுந்தை மறையோர், அந்தக் காலத்திலேயே இந்த