பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 வாக்கிய நரசிம்மவர்மன், அவன் தந்தை மகேந்திரவர்மன், அவன் தந்தை சிம்மவிஷ்ணு, முதலிய பல்லவ மன்னர்கள் எல்லாம் கலை வளர்ப்பதற்கு முன்னாலேயே இந்த சாளுக்கியர்கள் கலைவளர்க்க முனைந்திருக்கிறார்கள். அவ்வாறு அவர்கள் உருவாக்கிய பாதாமி, பட்டடக்கல் என்னும் தலங்களையும் முந்திக் கொண்டு இந்த ஐஹோளே கோயில்கள், குடைவரைகள் உருவாகியிருக் கின்றது. இங்குள்ள கோயில்கள் எல்லாம் கி. பி. ஐந்து ஆறாம் நூற்றாண்டுகளில் உருவானது என்று சரித்திர ஆசிரியர்கள் பேசும் போது நாம் வாயடைத்துத்தான் நிற்க வேண்டியிருக்கிறது. ஐஹோளே பாதாமிக்கு வடகிழக்கே பதினாறு மைல் தூரத்தில் இருக்கிறது என்றாலும், அங்கு செல்ல நல்ல வசதியான ரோடு கிடையாது. முன்னரே சொன்னபடி ரயிலிலே பாகல்கோடு போய் அங்கிருந்து பட்டடக்கல் வந்து, மல்ல பிரபா நதியையும் கடந்துதான் ஐஹோளே செல்ல வேண்டும். ஐஹோளேதான் சாளுக்கிய மன்னர்கள் அமைத்த முதல் தலைநகரம். பின்னால்தான் தங்கள் தலைநகர்ை பாதாமிக்கு மாற்றியிருக்கிறார்கள். பாதாமி யிலிருந்து அரசாண்ட சாளுக்கிய மன்னர்கள் சத்தியாச்சிரய புலிகேசி பெற்றிருந்த புகழ் காரணமாக சரித்திர ஆசிரியர் கள் எல்லா சாளுக்கியரையும் பாதாமி சாளுக்கியர் என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். நாம் அந்த சரித்திர வரலாற்றை எல்லாம் ஆராய வந்தவர்கள் அல்லவே. ஆதலால் ஐஹோளேயில் உள்ள கோயில்கள், குடைவரை களைக் காண கொஞ்சம் விரைந்தே செல்லலாம். இந்த ஐஹோளேயில், கிட்டத்தட்ட எழுபது கோயில் கள் இருக்கின்றன. அவைகளில் முப்பது கோயில்கள் ஒரு கோட்டைக்குள்ளே இருக்கின்றன. மற்றவை கோட்டைச் அவருக்கு வெளியே சிதறிக்கிடக்கின்றன. இங்குள்ள கோயில் களில் எல்லாம் பழமையானது லட்க்கான் கோயில்