பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 என்பதுதான். எதற்காக அக்கோயில் அந்தப் பெயர் பெற்றது என்று தெரியவில்லை. ஐஹோளே என்ற பெயருக்கே க ச ர ண ம் கண்டுபிடிக்க முடியவில் லையே, சாளுக்கிய மன்னர்கள் ஆரம்பத்தில் ஆர்யபுரம் என்றே இவ்வூரை அழைத்திருக்கின்றனர். பின்னர் ஐயாவோள் என்று வழங்கி இன்று ஐஹோளே என்று கருங்கி இருக்கிறது, என்று மட்டும் தெரிகிறது. லட்க்கான் கோயில் ஐந்தாம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் உரு வானது முன்னால் முகமண்டபத்துடன் கூடிய சிறிய கோயில்தான் அது. சாய்வான கூரையுடன் கூடிய கல் கட்டிடம் சிகரம் ஒன்றிருக்கிறது. ஆனால், கோயில் கட்டிப் பல வருஷங்களுக்குப் பின்தான் அது கட்டப் பட்டிருக்க வேண்டும் என்று கட்டிடக்கலை நிபுணர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள் என்றாலும் கோயில் புராணப் பொலிவோடு ஐந்தாம் நூற்றாண்டிலேயே ஆம் ஆயிரத்து ஐநூறு வருஷங்களுக்கு முன்பே கட்டப்பட்டுள்ளது என்றால் அது ஒர் அதிசயம்தானே. இதற்குப் பக்கத்திலே உள்ள கோயிலைத்தான் கோண்டிகுடி என்கின்றனர். அதற்குப் பக்கத்தில் இன்னும் இரண்டு கோயில்கள் இருக்கின்றன. எல்லாம் ஒன்றைப்போல் ஒன்றாகத்தான் இருக்கின்றன. எல்லாம் ஐம்பது அடிநீளத்திற்கும் உட்பட்டவைதான். மூன்று பக்கமும் அடைத்து இருக்கும். முன்பக்கத்தில் மட்டும் துரண்களோடு கூடிய திறந்த முகமண்டபம் இருக்கும். இங்கெல்லாம் நந்தி பெரிய வடிவில் அமைக்கப் பட்டிருக்கின்றது. இக்கோயில்களில் சிறப்பான மண்டபம் சாந்தகாரம் எனப்படும். மக்கள் கூடும் இடம்தான், இந்த சாந்தகாரமண்டபங்கள் நான்கு பக்கமும் திறப்பு உடைய மண்டபங்களாகத்தான் அமைந்திருக்கின்றன. கிராமத் தலைவர்கள் பலர் கூடவும், மற்றவர்கள் சுற்றியிருந்து பார்க்கவும் வசதியாக அமைந்திருக்கிறது. இங்கு தலை வருக்கு ஆசனமாக ஒரு பீடம் இருக்கிறது, லட்க்கான் கோயிலேயே இந்த மண்டபத்தைப் பார்க்கலாம். ஆனால் துரண்களுக்கு இடையில் உள்ள வெளியை இன்று சுவர்