பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 முழுவதையுமே காணோம். வலப்பக்கத்தில் பார்வதி நாணிக் கோணும் புதுமணப் பெண்ணாக நிற்கிறாள். வான வீதியில் தேவர்கள் எல்லாம் கூடி நின்று மலர்மாரி பெய்கின்றனர். இன்னும் இந்த பிரதான கோயிலிலேதான் கைலை மலையைப் பெயர்த்து எடுக்க முனையும் ராவணனும், இ ன் னு ம் அந்தகாசுரசம்ஹாரமூர்த்தி முதலியோரும் பெரிய பெரிய வடிவங்களாக உருவாகி இருக்கின்றனர். இக்குடைவரையின் மேற்கே ஒரு பகுதியும் கிழக்கே ஒரு பகுதியும் தனியாக உருவாகி இருக்கிறது. அங்கெல்லாம் கருவறை என்று ஒன்றையும் உருவாக்கி அதில் சிவலிங்க வடிவினையும் அமைத்து வைத்திருக்கிறார். மேல் புறம் உள்ள பகுதிக்குப் பக்கத்தில் ஒரு சுனைவேறு இருக் கிறது. கீழ்புறம் உள்ள பகுதியில் உள்ள தூண்கள் எல்லாம் மிக்க அழகோடு உருவாகியிருக்கின்றன. இந்தப்பகுதியில் தான் ஒரு பெரிய சிங்கமும் சிலைவடிவில் உருவாகி இருக் கிறது. மிக்க அருமையான வேலைப்பாடுடையதாகவும் இருக்கிறது. இந்தக் குடைவரையிலிருந்து வெளியே வந்து கிழக்கே பார்த்து நடந்தால் இன்னும் இரண்டு குடைவரைகளைக் காண்போம். அவைகள் எல்லாம் முன்மண்டபத்துடன் கூடிய குடைவரைகளே. இங்கெல்லாம் தூண்கள் அவ்வளவு அழகாக உருவாகவில்லை. வே று சிற்பவடிவங்களும் கிடையா. அதன்பின் தெற்கே பார்த்துத் திரும்பினால். இன்னும் இரண்டு குடைவரைகளைக் காணலாம். அவற் றைப் பற்றியெல்லாம் சிறப்பாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இன்னும் இரண்டு குடைவரைகளைக் காண அடர்ந்த காட்டிறகுள் கிழக்கு நோக்கி ஒரு மைல் போக வேண்டும் என்பவர். அவை குடைவரைகள்தாம். ஆதலால் சிரமப்பட்டு நடந்தாலும் பலன் ஒன்றும் இராது. எலிபெண்டா குடைவரைகளை அங்குள்ள அற்புத சிற்பவடிவங்களைப் பார்த்து விட்டுத் திரும்பும்போது நம்