பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209 உள்ளத்தை ஒன்றே ஒன்று அழுத்தும். கண்களில் நீர் கசியும். தெய்வ வடிவங்களை யெல்லாம் உருவாக்கும் தெய்வீகச் சிற்பிகளது கைத்திறனை எல்லாம் பூரணமாக அனுபவிக்க விடாமல் விக்கிரக விநாசர்களும் தோன்றியிருக்கிறார்களே என்று ஏங்குவோம். ஏதோ மகம்மதிய மன்னர் ஒரு சிலர் தான் இ ந் த விக்ாகவிநாசகர்களாக இருந்தார்கள் என்றில்லை. வியாபாரத்திற்கு வந்த இந்த போர்த்துக் கீசியர்கள் கூட பொல்லாதவர்களாக இரு ந் தி ரு க் கிறார்களே என்று மனம் வருந்துகிறோம், கலை உணர்வு இல்லாத காரணத்தில்தானே இத்தகைய அழிவு வேலையில் இறங்கி இருக்கிறார்கள். அழகுணர்ச்சி மட்டும்படைத்தவர் களாக இருந்திருந்தால் இத்தகைய கொடுமைகளை எல் லாம் செய்திருப்பார்களா எ ன் று எண்ணுவோம். அழகுணர்ச்சியும், கலை அழகை அனுபவிக்கும் திறமும் ஏதோ பயிற்சியால் பெறக்கூடிய ஒன்று அல்லவே. இறை வனது அருளாலே பெறவேண்டிய ஒன்றல்லவா என்று நம்மை நாமே தேற்றிக் கொண்டு, வழியும் கண்ணிரையும் துடைத்துக்கொண்டு திரும்ப வேண்டியதுதான். இக்குடைவரையை முழுக்க முழுக்க சிவபெருமானே ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறார். காத்தல் கடவுளான திருமால் ஏதோ சிறியவடிவில் சிவனது நிழலில் ஒதுங் கிறாரே தவிர, பெரிய வடிவில் தனித்து அவரை இந்த சிற்பிகள் உருவாக்கவில்லை. ஒரு வேளை அவருக்கும் பாதி இடத்தை ஒதுக்கிக் கொடுத்திருந்தால் போர்த்துக்கீசியர் அட்டூழியங்கள் நிகழாதபடி இவர் காத்திருப்பாரோ என்னவோ! சோனை வும் காத்து, கல் ஆனையும் காத்து, துரோபதை தன் தானையும் காத்து, அடைந்தானையும் காத்து தடத்து அல்லி