பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 சிறப்பாக நடக்கிறது. குசாவர்த்த தீர்த்தத்தின் வடபுறம் கங்கைக்கு ஒரு கோயில் இருக்கிறது. கங்கையம்மன் சிறிதாக இருந்தாலும் அ ழ கா. க இருக்கிறது. மாசிமாதத்தில் உற்சவம் நடக்கிறது. இன்னும் பல சிறிய கோயில்கள், இருக்கின்றன. ஊருக்கு வடபுறம் நீல பருவதம் என்றும் அழகிய குன்று ஒன்று இருக்கிறது. ஏறிப்போக நல்ல படிகள் இருக்கின்றன. அதன் உச்சியில் தத்தாத்ரேயர் கோயில் ஒன்றும் காலபைரவர் கோயில் ஒன்றும் இருக்கிறது. நீலாம் பரருக்கு என்று தனிக்கோயில் ஒன்றும் உண்டு. இக் கோயிலை அடுத்து நீலதீர்த்தம் என்று ஒரு குளிர் சுனை இருக்கிறது. அங்கு தண்ணிர் குளிர்ந்தும் தெளிந்தும் இருக் கிறது. இத்தலத்தில் உள்ள குசாவர்தமும் இமயமலையில் உள்ள கங்காதுவாரமும், பில்வதிர்த்தமும் நீலதீர்த்தமும், ஹரித்துவாரத்தில் உள்ள கன்கல் தீர்த்தமும் மறுபிறப்பை போக்க கூடியவை என்று புராணங்கள் கூறுகின்றன. ஆதலால் நாம் குசாவர்த்தத்திலும் நீல தீர்த்தத்திலும் மூழ்கி நம் வினை ஒழித்து பிறவிப் பிணியினின்றும் மீளலாம்.