பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 எல்லோரா ரோட் ஸ்டேஷன்களிலும் இறங்கிச் செல்ல லாம் என்றாலும், அங்கிருந்து எல்லோரா செல்ல டாக் சியோ, வண்டியோ கிடையாது. ஆதலால் அவுரங்காபாத் ஸ்டேஷனில் இறங்கி அங்குள்ள அரசினர் விடுதியில் தங்கி இளைப்பாறிக் கொண்டு, பின்னர் டாக்ஸி ஏற்பாடு பண்ணி மேற்கு நோக்கி பதினேழு மைல் செல்ல வேண்டும். அப்படிச்செல்வதற்கு முன்பே அவுரங்காபாத்தில் உள்ள சில கட்டிடங்களையும் பார்க்கலாம். இங்கு தாஜ்மஹாலைப் போன்ற ஒரு சிங்காரக் கட்டிடம் இருக்கிறது. இதனை பீபிகாமக்யாரர் என்று அழைக்கின்றனர். அது ரபியா தூனி என்ற பாத்திமா பேகம் பெயர் கொண்ட அவுரங்கசீப்பின் மனைவியின் ஞாபகார்த்தமாக ஆஜம்ஷா என்பவன் கட்டியிருக்கிறான் என்று சரித்திர ஏடுகள் பேசு கின்றன. அசப்பில் பார்த்தால் தாஜ்மஹாலைப் போலவே இருக்கும், என்றாலும் தாஜ்மகால் அமைந்திருக்கும் இடத்தைப்போல் ரமணியமான இடத்தில் அமைந்திருக்க வில்லை. அதைப்போல் கவர்ச்சியாகவும் இல்லை. இந்த நகரிலிருந்து 14-மைல் தொலைவில் உள்ள குல்தாபாத்தில் அவுரங்கசீப்பின் சமாதியும் இருக்கிறது. அவுரங்கசீப், முகம்மதுநபி கூறிய நெறியில் நடந்த நல்ல முஸ்லீம். தன்னை அடக்கம் செய்வதற்கு சர்க்கார் கஜானாவில் இருந்து ஒரு பைசாக்கூட செலவு செய்யக்கூடாது என்று திட்டமிட்டு தன் வாழ் நாள் முழுவதும் குல்லாய்கள் தைத்து அவைகளை விற்றுச் சேர்த்த பணத்தைக் கொண்டே தனக்கு சமாதி அமைத்துக் கொண்டவன். சர்க்கார் பொதுப்பணத்தை கையாளுவதில் அத்தனை து.ாய்மை உடையவன் என்று அறிகிற போது அவனது சமாதிக்குச் சென்று அவனுக்கு உரிய வணக்கத்தை செலுத்திவிட்டேமேல்நடக்கலாம். அவுரங்காபாத்திலிருந்து எட்டு மைல் தொலைவில் தேவகிரி என்ற தெளலதாபாத் கோட்டையும் இருக்கும், இன்னும் ஹைதராபாத் நைசாமின் மாளிகையும், மாலிக் அம்பர், அப்துல் ஹாசன் முதலியவர்களின் சமாதியும் இருக்கின்றன. இவற்றை எல்